Wednesday, December 8, 2010

Facebook, Twitter, Flickr, MySpace இணைய தளத்தில் உள்ள நண்பர்களை தேட..

Facebook, Twitter, Flickr, MySpace  மற்றும் பல சோசியல் நெட்வொர்க்-ல்
இருக்கும் நம் நண்பர்களை அவர்களின் பெயரை கொடுத்து ஒரே
நேரத்தில் அனைத்து சோசியல் நெட்வொர்க்-லிலும் தேடலாம
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

   
                                                                             படம்-01
                                                          
நண்பர்கள் மட்டுமல்ல நமக்கு தெரிந்தவர்கள் பெயர் மட்டும்
தான் தெரிகிறது என்று வைத்துக்கொள்வோம். ஒவ்வொரு
சோசியல் நெட்வொர்க்காக சென்று சென்று இனி தேட வேண்டாம்
ஒரே இடத்தில் இருந்து கொண்டு நாம் அனைத்து சோசியல்
நெட்வொர்க்லிலும் தேடலாம் நமக்கு
உதவுவதற்காக ஒரு
இணையதளம் உள்ளது.
இணையதள முகவரி : http://snitch.name
இந்தத்தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி இருக்கும்
கட்டத்திற்குள் யாரைத் தேடவேண்டுமோ அவரின் First name
மற்றும் Last Name கொடுத்து எந்தெந்த சோசியல் நெட்வொர்க்-ல்
சென்று தேடவேண்டுமோ அதை தேர்ந்தெடுக்கவும் அதன் பின்
Search என்ற பொத்தானை அழுத்த வேண்டும் அடுத்து வரும்
திரையில் நாம் கொடுத்த பெயருடன் உள்ள அனைவரின்
தகவல்களும் நமக்கு காட்டப்படும். மற்றதளங்களை விட இதில்
என்ன புதுமை இருக்கிறது என்றால் சோசியல் நெட்வொர்க்-ல்
பயனாளர் பெயர் எப்படி வேண்டுமானாலும் வைத்து இருப்பார்கள்
ஆனால் First Name மற்றும் Last Name வைத்து தேடுவதால்
பல பிரபலங்களின் சோசியல் முகவரியும் நமக்கு கிடைக்கும்.
சோசியல் நெட்வொர்க் பற்றி அதிக தகவல்கள் தெரிந்து
கொள்ள விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

0 comments:

Post a Comment