Tuesday, December 21, 2010

பேஸ்புக் (Face Book)

பேஸ்புக் இணைய தளத்தின் (Face Book website) இன்றைய பில்லியன் பெறுமதி 30 பில்லியன் டாலர் மார்க் சுக்கர்பேர்க் (Mark Zuckerberg) ஹாவாட் பல்கலைக் கழகத்தில் படிக்கும் போது ஒரு நண்பன் உதவியோடு இந்த இணையத்தளத்தை 2004ல் ஆரம்பித்தார் அப்போது அவருக்கு வயத 20
தனி நபர்கள் தமது சொந்த ஆசா பாசங்கள், குறை நிறைகள், வாழ்வின் எதிர்பார்ப்புக்கள் குடும்பத் தகவல்கள், நட்புப் பரிமாற்றங்கள் போன்ற இன்னோரான்ன தகவல்களை வெளிப்படுத்தும் தளமாக பேஸ்புக் அமைக்கப்பட்டது

தன்னைப் போன்ற பிறருடன் தொடர்பு கொள்ள வகை செய்யும் சமூகங்களுக் கிடையிலான தொடர்புப் பாலம் என்று பேஸ்புக் வர்ணிக்கப்படுகிறது உலகின் முன்னணி தொடர்புப் பாலமாக பேஸ்புக் வளர்ச்சி அடைய அது வழங்கிய பல்துறை வாய்ப்புக்கள் காரணமாக அமைகின்றன
500 மில்லியனுக்கும் மேற்பட்ட அனைத்துலக மக்கள் நிறம்,மதம், நாடு வேறுபாடின்றி அதைப்  பயன்படுத்துகின்றனர் மனிதன் ஒரு சமூகப் பிராணி பிற மனிதப் பிறவிகளோடு நட்பு அடிப்படையில் தொடர்பு கொள்ள அவன் விரும்புகின்றான் இது மனிதனின் அடிப்படைத் தேவைகளில் மிக முக்கியமானதொன்று பேஸ்புக் இந்தத் தேவையைப் பூர்த்தி செய்கிறது
பேஸ்புக்கின் வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் இதுவே காரணம் தனி மனிதர்களின் பிரத்தியோக வாழ்வுத் தகவல்கள் அம்பலத்திற்கு வர பேஸ்புக் காரணமாகி விட்டது என்று குற்றஞ்சாட்டப்பட்டாலும் அதன் மங்காப் புகழ் தொடர்கின்றது பேஸ்புக்கைப் போன்ற பிற சமூகத் தொடர்புத் தளங்கள் தோன்றிக் கொண்டிருக்கின்றன.

1 comments:

Abirajan said...

philosophy prabhakaran,

முதலில் உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.
நண்பரெ மன்னிக்கவும் எனக்கு ஏற்பட்ட தொழிநுட்ப தடங்களுக்கு நான் வருந்துகிறேன். உங்களுடைய கருத்தினை தொடர்ந்தும் நான் வரவேற்கிறேன்....

Post a Comment