Saturday, March 26, 2011

மொபைல் தகவல்கள் அனைத்தையும் ஆன்லைன் -ல் பேக்கப் செய்ய சிறந்த தளம்.



நாம் பயன்படுத்தும் மொபைலில் இருக்கும் தகவல்களை எளிதாக ஆன்லைன் மூலம் பேக்கப் (Mobile Data Backup)  செய்து வைக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு
.
மொபைல் மட்டும் இப்போது கையில் இருக்கிறது எந்த மென்பொருள் கொண்டு அத்தனை தகவல்களையும் சேமிக்கலாம் என்று நினைக்கும் அனைவருக்கும், பிரபலமான அனைத்து மாடல் மொபைல்-களும் துணைபுரியும் வகையில் ஆன்லைன் மூலம் நம் மொபைல் தகவல்களை பேக்கப் செய்து வைக்க ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://www.mobyko.com
இந்தத்தளத்திற்கு சென்று நாம் ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கிக் கொண்டு நம்மிடம் இருக்கும் மொபைல் போனினின் நிறுவனத்தையும் மாடலையும் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும் அடுத்து நம் மொபைலில் இருந்து Address book முதல் Photos , videos , Games என அனைத்தையும் எளிதாக தரவிலக்கலாம் ஆன்லைன் மூலம் சேமிப்பதால் ஒரு வசதி இருக்கிறது இண்டெர்நெர் இணைப்பு இருக்கும் அனைத்து இடத்திலும் நாம் தகவல்களை பார்க்கலாம். கூடவே நாம் மொபைலில் எடுக்கும் புகைப்படங்களை பேஸ்புக் போன்ற சோசியல் நெட்வொர்க் தளங்களில் பகிர்ந்து கொள்ள வசதியும் இருக்கிறது.

Friday, March 25, 2011

ஒரு புதிய DIRVE நம் கணனியில்


உங்கள் கணனியில் உள்ள Hard Drive வை ஒன்றுக்கு மேற்பட்ட பகுதிகளாக பிரித்து இருபீர்கள், இருப்பினும் உங்களுக்கு மேலதிக ஒரு driver தேவைப்படுகிறது தனிப்பட்ட files களை சேமிப்பதற்கு, கவலையை விடுங்கள் மேலதிக எந்த ஒரு மென்பொருளும் நிருவாமல் ஒரு புதிய dirve உங்களை கணனியில் கொண்டுவர கிழே உள்ள படிமுறையை செயல்படுத்துங்கள்.


GO TO "C" DRIVE


புதிய Folder ஒன்றை திறந்து simplex என rename செய்துகொள்ளவும். (நீங்கள் விரும்பிய பெயரை கொடுக்கலாம் )




Start ---> Accessories ---> Command Prompt - open செய்யவும்





கிழே உள்ள code ஐ commad prompt இல் type செய்து enter செய்யவும்
subst z: c:\simplex

நீங்கள் newfolder இல் கொடுத்த பெயரை இங்கே கொடுக்கவும்


பின்பு mycomputer சென்று பாருங்கள் புதிதாக ஒரு driver காணப்படும்



புதிய driver ஐ அகற்ற இந்த code ஐ type செய்து enter செய்யவும்
subst z: /d



இப்போது புதிய drive கம்ப்யூட்டர் இல் இருக்காது.

TNC இல்லாமல் கணினியில் T.V பார்க்க


  இந்த மென்பொருளின் துணை கொண்டு நீங்கள் உங்கள் கணினியில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கலாம் இதற்கு எந்தவொரு hardware துணையும் தேவை இல்லை..மற்றும் இதில் நீங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பது முற்றிலும் இலவசம்..இதில் நீங்கள் தமிழ் உள்பட உலகின் பல்வேறு மொழிகளின் நிகழ்ச்சிகளை நீங்கள் இலவசமாக பார்க்கலாம்..மென்பொருளின் அளவு வெறும் 5 mb தான்..அதன் தரவிறக்க சுட்டியை கீழே கொடுத்துள்ளேன் தரவிறக்கி கொள்ளுங்கள்..

இந்த மென்பொருளின் வழியாக நிகழ்ச்சிகளை பார்க்க கண்டிப்பாக இணைய இணைப்பு தேவை..

தமிழ் channel அனைத்து open ஆகும்..அதில் உங்களுக்கு விருப்பமான channel-ஐ தேர்வு செய்தால் உங்களுக்கு விருப்பமான நிகழ்ச்சிகளை நேரடியாக பார்க்கலாம்...இதில் தமிழ் ,தெலுங்கு ,இந்தி,மலையாளம் ,உள்பட இந்தியாவின் பல மொழி நிகழ்ச்சிகளை பார்க்கலாம்...மேலும்முக்கியமாக உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளை நீங்கள் உங்கள் கணனியில் சேமித்து வைத்து கொள்ளலாம்...


Tuesday, March 15, 2011

வேகமாக கோப்புகளை காப்பி செய்யும் டெராகாப்பியின் Full Version.


பொறுத்தார் பூமியாள்வார் என்பார்கள். கணினியை பொறுத்தவரை நம் பொறுமையை சோதிக்கும் பல விஷயங்கள் நடக்கும். அதில் ஒன்று மிகப்பெரிய கோப்புகளையோ,
போல்டெர்கலையோ காப்பி செய்யும் போது மிக குறைவான வேகம் மற்றும் பல இடையூறுகள். 
அதிக கோப்புகள் உள்ள பெரிய போல்டெர்களை காப்பி செய்யும் போது இடையில் ஏதாவது பிழை செய்தி தந்து விட்டு காப்பி செய்வது நின்று விடும். எந்த கோப்பு வரை காப்பி ஆனது எது காப்பி ஆகவில்லை என்ற குழப்பம் நேரிடும். மீண்டும் அந்த ஒட்டு மொத்த போல்டரயுமே காப்பி செய்ய வேண்டும். காப்பி செய்யும் போது நேரக்கூடிய மிக குறைவான வேகம் எரிச்சலை தரும். 
விண்டோஸ் இயங்குதளத்தில் இந்த பிரச்சினைக்கு தீர்வு தரும் விதம் ஒரு மென்பொருள் உள்ளது. TeraCopy - இங்கே கிளிக் செய்து இந்த மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள். இனி நீங்கள் காப்பி செய்து பேஸ்ட் செய்யும் போது இந்த மென்பொருள் தானாக இயங்க ஆரம்பிக்கும். 

இந்த மென்பொருளின் சிறப்பம்சங்கள் : 
1. துரிதமாக காப்பி வேலையை செய்து முடிக்கும். 


2. காப்பி செய்து கொண்டிருக்கும் போது அதனை "Pause" செய்து வைத்து கொண்டு பின்பு "Resume" செய்து காப்பி வேலையை தொடரலாம். 

3. காப்பி செய்து கொண்டு இருக்கும் போது , ஒரு குறிப்பிட்ட கோப்பு காப்பி செய்வதில் இடையூறு ஏற்பட்டால் அந்த கோப்பை விட்டு விட்டு மற்ற கோப்புகளை காப்பி செய்யும். ஒட்டு மொத்த காப்பி வேலையையும் தடை செய்து விடாது.
 
4. இடையூறு ஏற்பட்ட கோப்புகளின் பட்டியலை காண்பிக்கும். அந்த கோப்புகளை நீங்கள் சரி செய்து பின்பு காப்பி செய்து கொள்ளலாம். 

உபயோகித்து பாருங்கள். இந்த மென்பொருள் தேவை இல்லை என்றால் Start --> Programs --> Teracopy --> Uninstall Teracopy செய்து விட்டு பழைய காப்பி முறையை பெற்று கொள்ளுங்கள்.
                       Download




Sunday, March 13, 2011

Keylogger(Hacking Software)


keylogger பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும்.  keylogger  இனை உங்களது கணினியில் நிறுவியதும்.நீங்கள் அடிக்குகும் ஒவ்வொரு keystroke பதிவு செய்யப்படும்...
உங்களுது திரையுள் தெரியும் காட்சிகள் சில நேரங்கக்கு ஒரு முறை screen shot எடுத்து தகவல்கள் அனைத்தும் keylogger   இன்ஸ்டால் பன்னிவர் மினஞ்சளுக்கு தானாக சென்று விடும்.

                               ஆனால் இந்த Keylogger இல் screen shot எடுக்க முடியாது. keystroke  பதிவு மட்டுமே செய்துகொள்ள முடியும்.இந்த Software- ஐ தேவையான machine -ல்  நிறுவி அதன் தகவல்களை எடுக்க முடியும்.நீங்களும் இந்த Keylogger மென்பொருளை உபயோகித்து பாருங்கள்.
அப்புறம் மறக்காம ஓட்டு போடுங்கள்.




keylogger (hacking)

கkeylogger பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும்.  key logger  இனை உங்களது கணினியில் நிறுவியதும்.நீங்கள் அடிக்குகும் ஒவ்வொரு keystroke ம பதிவு செய்யப்படும்... உங்களுது திரையுள் தெரியும் காட்சிகள் சில நேரங்கக்கு ஒரு முறை screen shot எடுத்து  தகவல்கள் அனைத்தும் keylogger   இன்ஸ்டால் பன்னிவர் மினஞ்சளுக்கு தானாக சென்று விடும்.


                               ஆனால் இன்று பார்க்கப்போக்கும் Keylogger 

Saturday, March 12, 2011

Card Recovery (Serial number Free)


சிலர் கணினியில் அல்லது மொபைலில் படம் , பாட்டு,தகவல் போன்றவற்றை வைத்து இருப்பார்கள் . அவற்றில் ஏதேனும் அழிக்கப்பட்டு விட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் விழிப்போம் .
அதற்காகவே சிறந்த மென்பொருள் உள்ளது.
                          
   
இந்த மென்பொருள் மிகவும் சிறந்ததாக இருக்கிறது. நீங்கள் இத்னை உபயோகப்படுத்திவிட்டு மறக்காம எனக்கு கருத்தினையும் ஓட்டினையும் போடுங்கள்...

Friday, March 11, 2011

விண்டோஸ் றியிஸ்ரி என்றால் என்ன?



விண்டோசில் றியிஸ்ரி என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதிலேயே விண்டோஸ் இயங்கு தளம் பற்றிய சகல விபரங்களும் பதிந்து வைக்கப் பட்டிருக்கும். இதில் ஏதேனும் தவறான மாற்றங்கள் ஏற்படுமிடத்து விண்டோஸ் இயங்குதளமே பதிக்கப்படும். ஆனால் இதைப்பற்றி நன்றாக அறிந்தவர்கள் இதில் மாற்றங்கள் மேற்கொண்டு விண்டோஸை தம் விருப்பப்படி மெருகேற்றலாம்.


இந்த றியிஸ்ரில் மாற்றம் செய்வதன்மூலம் நாம் பலவாறான மாற்றங்களை விண்டோஸில் ஏற்படுத்தமுடியும். உதாரணமாக

♠ Start பட்டனிலுள்ள Start என்பதற்குப் பதிலாக நமக்கு விருப்பமான பெயரை இடலாம்.


♠ கணினி On ஆகி விண்டோஸ் Loading ஆகும் போது உங்களுடைய பெயர் வரும்படி செய்யலாம்.



♠ Recycle bin ற்கு பெயரை மாற்றலாம்.


♠ மை கம்யூட்டரில் உள்ள floppy டிரைவையோ அல்லது வேறு டிரைவுகளையோ மறைக்க முடியும்.
♠ இண்டர்நெட் எக்ஸ்புளோரரின் பின்னனியை மாற்றலாம்.
♠ இண்டர்நெட் எக்ஸ்புளோரரின் பெயரை மாற்றலாம்.


♠ Display properties ஜ மறைக்க முடியும்.
♠ Control panel ஜ மறைக்க முடியும்.
♠ Start மெனுவின் வேகத்தை கூட்ட முடியும்.
♠ விண்டோஸ் மூலம் டொஸ்ஸிற்கு செல்வதை தடுக்கலாம்.
♠ Shortcut களின் அடியிலிருக்கும் வளைந்த அம்புக்குறிகளை அளிக்கலாம்.

இவற்றைப்போன்று பல்வேறு ஜாலங்களை றியிஸ்ரியில் மாற்றங்கள் செய்வதன்மூலம் புரியலாம்.ஆனால் இவற்றைச் செய்யும்முன்னர் நீங்கள் றியிஸ்ரியை Backup எடுத்துவைத்தல் அவசியமாகும் ஏனெனில் தற்சமயம் நீங்கள் மாற்றம் செய்யும் போது ஏதாவது தவறு ஏற்பட்டுவிடின் இது பயன்படும்.

றெயிஸ்ரியை Backup செய்து கொள்ள.
Start -> Run -> Regedit
இப்படி றியிஸ்ரியை திறந்து பைல் மெனுவிலுள்ள Export என்பதை கிளிக் செய்து Save செய்யவேண்டிய இடத்தைக் காட்டி இதற்கு ஒரு பெயரை வளங்கி அதற்கு அடுத்ததாக Export range என்பதில் All என்பதை தெரிவு செய்து Save செய்தால் போதும்.

Monday, March 7, 2011

நீங்கள் அடிக்கடி பார்க்கும் இணையத்தளம் ஒன்றுக்கு Shortcut ஒன்றை உருவாக்கும் முறையை அறிவீர்களா?



# முதலில் உங்களுக்கு விருப்பமான இணையத்தளத்தை திறந்து கொள்ளுங்கள்.
# அடுத்து அவ் இணையப் பக்கத்தில் link எதுவும் இல்லாத இடத்தில் வைத்து Right click செய்யுங்கள்.
# அப்போது கிடைக்கும் Contact menu வில் Create shortcut என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
# இப்போது ஒரு Dialog box தோன்றும் அதிலே Yes என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
# இப்போது உங்கள் Desktop ல் அவ் இணையப் பக்கத்திற்கான Shortcut உருவாக்கப் பட்டிருக்கும்.
# இத்துடன் Shortcut உருவாக்கும் வேலை முடிந்தது. 

Shortcut ஒன்றை உருவாக்குவதால் என்ன பயன் எனில் நீங்கள் இணையத்தில் உலவிக்கொண்டிருக்கும்போது எதிர்பாராமல் உங்களுக்குத் தேவையான விடயம் இருக்கும் ஒரு பக்கத்திற்குச் செல்லக்கூடும் அவ்வேளையில் அப்பக்கத்தின் முகவரி நீளங்கூடியதாக ஞாபகம் வைத்துக் கொள்ள முடியாதிருக்கும் அவ்வேளையில் நீங்கள் மேற்கூறியவாறு அப்பக்கத்திற்கு Shortcut ஒன்றை உருவாக்கிவிடுங்கள். இனி அந்தப் பக்கத்தை Close செய்ய விரும்பினால் Close செய்யலாம்.


இனி நீங்கள் Computer ஜ Restart செய்தால் கூட Desktopபிலுள்ள அந்தப் பக்கத்திற்கான Shortcutஜ Double click செய்தால் போதும் நேரடியாக அந்தப் பக்கமே Openஆகிவிடும். முயன்று பாங்கள்.

உங்கள் கம்ப்யூட்டரில் “NTLDR missing, press ctrl + alt + delete to Restart” என்று வந்தால்....




உங்கள் கம்ப்யூட்டரை Start செய்யும் போது "NTLDR missing, press ctrl+alt+delete to Restart” என்று வந்தால் என்ன செய்வீர்கள்?

NTLDR என்பது New Technology loader என்பதாகும். கம்ப்யூட்டர் Start ஆகும்போது BIOS ஆனது Harddrive ன் Active Partition MBR க்கான முதலாவது Sector ஜ Read செய்யும் பின்புதான் மற்ற Os பகுதிகள் Loading ஆகும். MBR ஆனது NTLDR ற்கு point செய்யப்பட்டுள்ளது. ஆகவேதான் NTLDR , Ntdetect.com போன்ற பூட்டிங் பைல்களில் ஏதாவது பிழை ஏற்படும் போதுதான் மேற்கூறிய Error message வருகிறது.

இப்படி பிரச்சனை வரும்போது விண்டோஸை புதிதாக நிறுவாதீர்கள் ஏனெனில் இப்படிச் செய்தால் நீங்கள் "My document" ல் சேர்த்து வைத்திருக்கும் அனைத்து பைல்களும் அளிந்துவிடும். இந்தப் பிரச்சனைக்கு சிறந்த வளியொன்று உள்ளது.

•முதலில் கம்ப்யூட்டரை "Restart" செய்யுங்கள்
•பின்பு கம்ப்யூட்டரை 'விண்டோஸ் CD' மூலம் பூட்டிங் செய்யுங்கள்
•சிறிது நேரத்தில் Taskbar , Enter=Continue , R=Rapier , F3=Quit போன்றவற்றைக்
கொண்ட திரை தோன்றும்
•அப்போது 'R' என்பதை அளுத்துங்கள் பின்பு
•1 Windows என்பதும் அதற்குக்கீழ் Which windows installation would you like to log onto (to cancel, press Enter)? காணப்படும் இதில் 1 ஜ அளுத்துங்கள்.
•பின்பு உங்கள் “Administrator” பாஸ்வேடைக் கொடுத்து “Log on” செய்யுங்கள்.
•இனி C:\Windows> என்பதில் கீழுள்ள Code ஜ Type செய்யுங்கள்

Copy E:\I386\NTLDR C:\
Copy E:\I386\NTDETECT.COM C:\

என்று Type செய்து Enter செய்தால் சரி.

இனி Exit எனறு Type செய்தால் இதை விட்டு வெளியேறலாம். அல்லது 'Restart' செய்யுங்கள். இப்போது உங்கள் பிரச்சனை சரியாகிவிடும்.

குறிப்பு : இங்கு C என்பது “CD Rom Drive” ஆக கொடுத்துள்ளேன். நீங்கள் உங்கள் கம்யூட்டரில் CD Rom Drive ஆக எது உள்ளதோ அதைக் கொடுத்தால் சரி.

குறிப்பு : இங்கு E என்பது எனது கம்ப்யூட்டரில் விண்டோஸ் install செய்துள்ள Drive ஆக கொடுத்துள்ளேன். நீங்கள் உங்கள் கம்யூட்டரில் எந்த Drive ல் விண்டோஸ் install செய்துள்ளீர்களோ அதைக் கொடுத்தால் சரி.

இந்த இரண்டையும் சரியாகக் கொடுப்பது மிகவும் அவசியம்.

Printer ஒன்றை Install செய்வது எப்படி?











1. முதலில் -> Control panal -> Printers and Faxes என்பதைக் கிளிக் செய்யுங்கள் அப்பொழுது கீழுள்ளது போன்று Printers and Faxes Open ஆகும்

2. இங்கே ஏற்கனவே இரண்டு printer கள் Install செய்யப் பட்டுள்ளன மூன்றாவதாக printer ஒன்றை Install செய்ய வேண்டுமாயின் Step 02 நீல செவ்வகத்தில் காட்டியவாறு Add a Printer என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்


3. பின்பு Next என்பதைக் கிளிக் செய்யுங்கள்

4. அடுத்து Local printer attached to this computer என்ற முதலாவது option Button ஜ தெரிவு செய்து Next Button ஜ கிளிக் செய்யுங்கள். இதற்குக் கீழுள்ள Automatically detect and install my plug and play printer என்ற Check button tick செய்ய வேண்டாம். ஏனெனில் இதைக் கிளிக் செய்தால் உங்கள் computer ரே printer ஏதாவது இணைக்கப் பட்டுள்ளதா என்று சரிபார்க்கும். இதனால் நேர விரயம் ஏற்படும்.


அதற்குக் கீழுள்ள Option Button ஜ Network printer ஒன்றை நிறுவுவதாயின் மட்டுமே தெரிவு செய்ய வேண்டும். நாம் இப்போது நிறுவப் போவது ஒரு சாதாரண Printer ரே அதனால் நீங்கள் முதலாவது option Button ஜ தெரிவு செய்தாலே போதும் பின்பு Next என்ற Button ஜ கிளிக் செய்யுங்கள்.

5. Next Button ஜ கிளிக் செய்ததும்; Step 05 ல் உள்ளதுபோல் ஒரு Dialog Box தோன்றும். இதிலே Use the Following port என்பதற்கு நேரே உள்ள Drop down box ல் சிவப்பு சதுரத்தால் காட்டப்பட்டுள்ள அம்புக் குறியை கிளிக் செய்து வரும் மெனுவில் உங்கள் printer எந்த Port ன் வழியாக கணினியுடன் இணைகிறதோ அதை தெரிவு செய்ய வேண்டும்.


பின்பு Next ஜ கிளிக் செய்யுங்கள்.

இப்போது Step 07 ல் உள்ளது போன்ற ஒரு Dialog Box தோன்றும் அதிலே Manufacture என்பதில் தயாரிப்பாளர்களின் list ம் Printers என்பதில் பிரிண்டர்களின் மொடல்களும் காணப்படும். நீங்கள் உங்களுக்குத் தேவையான பிரிண்டரை Manufacture என்பதில் தேர்ந்தெடுத்தால் அந்தப் பிரிண்டரிலுள்ள மொடல்கள் Printers எனும் பெட்டியில் காட்டப்படும் அதிலிருந்து உங்கள் பிரிண்டரின் சரியான மொடல் இலக்கத்தை தேர்ந்தெடுப்பதன் மூலம் அதற்கான Driver ஜ நிறுவிக் கொள்ளலாம்..

இந்த List களில் உங்கள் பிரிண்டரிற்குரிய சரியான Driver மென்பொருள் இல்லையென்றால் பிரிண்டர் வாங்கும் போது உங்களுக்குக் கொடுக்கப்பட்ட CD ஜ உங்கள் CD Rom ல் இட்டுவிட்டு Step 08 ல் சிவப்பு வட்டத்தால் காட்டப்பட்டுள்ள Have Desk என்ற Button ஜ அழுத்துங்கள் அப்போது Step 09 ல் படம் 01 ல் காட்டப்பட்டுள்ளது போன்ற ஒரு சிறிய Dialog box தோன்றும் அதிலுள்ள Brows என்ற button ஜ Click செய்யுங்கள் உடனே படம் 02 ல் உள்ளதுபோன்ற ஒரு Dialog Box தோன்றும் அதில் பச்சை செவ்வகத்தால் காட்டப்பட்டுள்ள Look in என்னும் பெட்டியிலுள்ள அம்புக்குறியை கிளிக் செய்து உங்கள் CD ஜ காட்டி Open Button ஜ அழுத்துவதன் மூலம் நிறுவிக் கொள்ளலாம்.


அந்த List களில் உங்கள் பிரிண்டரிற்குரிய Driver மென்பொருள் இருந்தால் Step 10 ல் HP பிரிண்டரின் ர்P HP Deskjet 600 என்ற பிரிண்டர் நிறுவப் படுவதைப் போல் தேர்ந்தெடுத்து Next Butto ஜ அழுத்துங்கள்.
அடுத்து Step 11ல் உள்ளதுபோல் ஓரு Dialog Box தோன்றும் அதிலே உங்கள் பிரிண்டரிற்கான பெயரைக் கொடுத்து Do you want to use this printer as the default printer என்பதற்கு Yes என்பதை தெரிவு செய்து Ok ஜ அழுத்துங்கள்.



அடுத்து வரும் Dialog Box ல் Do not share this printer என்பதை தெரிவுசெய்து Next ஜ கிளிக் செய்யுங்கள். உங்கள் கணனி மற்றய கணனிகளுடன் Network ல் இணைந்திருந்தால் Share Name என்பதை தெரிவுசெய்து அதற்கு ஒரு பெயரை கொடுத்து இந்த பிரிண்டரை நெடவெர்க்கில் Share செய்யலாம்.
அடுத்து வரும் Dialog Box ல் Do you want to print a test page என்பதற்கு Yes என்பதை கொடுத்து Next ஜ Click செய்தால் பிரிண்டர் நிறுவப்பட்டதற்கு உறுதியாக ஒரு paper print செய்யப் படும். அடுத்து Finish என்பதை கிளிக் செய்யுங்கள்.

Finish ஜ அழுத்தியதும் Printers and faxes என்பதில் நீங்கள் கொடுத்த பெயருடன் உங்கள் பிரிண்டர் நிறுவப்பட்டிருக்கும்.