Saturday, February 26, 2011

PenDrive இல் உங்கள் personal File இனை மறைக்க








இப்பொழுதெல்லாம் பெரும்பாலும் அனைத்து பயனாளர்களும் தனக்கென்று PenDrive வைத்திருக்கிறார்கள். உங்களது பென் ட்ரைவில் உங்கள் அலுவல் சம்பந்தமான கோப்புகள், கோப்புறைகள் மட்டுமின்றி உங்களது தனிப்பட்ட கோப்புகள், புகைப்படங்கள் ஆகியவற்றையும் வைத்திருப்பீர்கள். 


ஒரு சில சமயங்களில் உங்கள் பென் ட்ரைவை மற்றவர்கள் அவசரமாக பயன்படுத்த கொடுக்கலாம். அல்லது உங்கள் மேலதிகாரி முன்னிலையில் உங்கள் பென் ட்ரைவை கணினியில் திறக்க வேண்டிய சூழல் உருவாகி, அப்படி திறக்கையில் அதில், அவர் பார்க்ககூடாத புகைப்படங்களை அவர் பார்த்துவிடும் சூழ்நிலையும் வரலாம்.

இது போன்ற தர்மசங்கடமான சூழ்நிலையை தவிர்க்க ஒரு  இலவச மென்பொருள் கருவி WinMend Folder Hidden எனும் சிறிய சக்திவாய்ந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது) 

இந்த மென்பொருள் கருவியை பயன்படுத்தி உங்கள் பென் ட்ரைவில் Hide  செய்த கோப்புகளை, பிற கணினிகளிலும், குறிப்பாக விண்டோஸ் தவிர வேறு இயங்கு தளங்களிலும் கூட திறக்க இயலாது என்பது மிக முக்கியமான சிறப்பம்சமாகும். மேலும் பென் ட்ரைவ் மட்டுமின்றி உங்கள் வன் தட்டில் உள்ள கோப்புறைகளையும் இதை பயன்படுத்தி கடவு சொல் கொடுத்து மறைத்து வைக்க இயலும்.



இந்த கருவியை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி, முதல் முறையாக அதனை இயக்கும் பொழுது, உங்களுக்கான கடவு சொல்லை (கடவு சொல்லை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்) கொடுங்கள்.


அடுத்து திறக்கும் WinMend Folder Hidden பயன்பாட்டுத் திரையில்,Hide Folder அல்லது Hide File(s) பொத்தானை க்ளிக் செய்து, மறைக்க வேண்டிய கோப்புகள் மற்றும் கோப்புறைகளை உங்கள் பென் ட்ரைவிலிருந்து அல்லது உங்கள் கணினியிலிருந்து தேர்வு செய்து கொள்ளுங்கள்.


அவ்வளவுதான் இந்த விண்டோவை மூடிவிடலாம். இனி நீங்கள் மறைத்து வைத்த கோப்புகளை உங்கள் கணினி மட்டுமின்றி வேறு எந்த கணினியிலும் பார்க்க இயலாது. மறுபடியும், Unhide செய்ய இதே மென்பொருளை இயக்கி சரியான கடவுசொல்லை கொடுத்து,



தேவையான கோப்புறைகள்/கோப்புகளை Unhide செய்து கொள்ளலாம்.



Friday, February 25, 2011

Folder இன் நிறத்தை மாற்றுவது எப்படி ?



எத்தனை நாளுக்கு நாமும் Windows XP இன் மஞ்சள் Color Folder ஐப் பார்த்துக்கொண்டு இருப்பது மஞ்சள் நிற Folder இற்க்குப் பதிலாக சிகப்பு, பச்சை, நீலம் என்று கலர் கலராய் Folder இருந்தால் எப்படி இருக்கும்.
அதற்காக உள்ளது தான் Folder Marker என்ற மென்பொருள். இம் மென்பொருளை Install பண்ணிவிடு நீங்கள் கலர் மாற்ற வேண்டிய Folder இல் Right click செய்து அதில் mark Folder என்பதை Select செய்தால் படத்தில் உள்ளது போல வரும் அதில் உங்களுக்கு விருப்பமான நிறத்தை தெரிவு செய்தால் போதும் உங்கள் Folder நீங்கள் விரும்பிய நிறத்தில் மாறிவிடும்.

ஆனால் இதை இலவசமாக 30 நாளைக்கே பயன்படுத்த விடுவார்கள். நாம் தொடர்ந்து பயன்படுத்த விரும்பினால் சிறிய தொகையை செலுத்த வேண்டும். இதை இலவசமாக தொடர்ந்து பயன்படுத்த கீழ் உள்ள
முறைப்படி செய்யவும்

Register பண்ணும் முறை:
Folder Marker இன்  Professional version தேவைப்படுவோர் அதன் crack file ஐ இயக்கி அதில் உங்கள் பெயரை கொடுத்து விட்டு crack it என்பதை Click செய்ய open ஆகும் விண்டோவில் நீங்கள் முதலில் Software Install பண்ணிய Folder காட்டி விட்டு Ok பண்ணவும் உதாரணமாக D:\Program Files\Folder Marker ) அது உங்கள் Software Register பண்ணி Professional version ஆக மாற்றிவிடும். இனி நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம்

Download Software and Crack : http://www.box.net/shared/etx8r15kp1 

Hard disk இன் Free space இடத்தை அதிகரிக்க எளிய வழி முறை.







முக்கியமான சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்யும்போது அல்லது ஏதாவது பைல்களை சேமிக்கும்போதோ டிரைவில் இடம் இல்லை என்கின்ற தகவல் வந்து நம்மை எரிச்சலுட்டும். தற்காலிகமாக நாம் இடம் ஏற்படுத்திக்கொடுத்து நிலைமையை சமாளிக்கலாம். அதை புதியவர்கள் எவ்வாறு செயல்படுத்துவது என்று இன்று பார்க்கலாம்.முதலில் ஒவ்வொரு டிரைவிலும் எவ்வளவு காலி இடம் இருக்கின்றது என்பதனை தனியே குறித்துக்கொள்ளுங்கள்.இப்போது My Computer மீது ரைட் கிளிக செய்து Properties கிளிக் செய்யுங்கள். கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் System Restore டேபை தேர்வு செய்யுங்கள்




அதில் எந்த டிரைவின் அளவை அதிகரிக்க வேண்டுமோ அதனை தேர்வு செய்யுங்கள். நான் சி - டிரைவை தேர்வு செய்துள்ளேன்.இப்போது Setttings கிளிக் செய்யுங்கள்.




வரும் விண்டோவில் Disk space to use என்பதில் உள்ள ஸ்லைடரை Max -திலிருந்து Min - க்கு கொண்டுவாருங்கள். கீழே உள்ள விண்டோ வினை பாருங்கள்





ஓ.கே. கொடுத்து பின்னர் மீண்டும் திறந்து இப்போது தேவையான அளவிற்கு ஸ்லைடரை நகர்த்துங்கள்





மீண்டும் ஓ,கே. கொடுததுவிடுங்கள் இப்போது உங்கள் டிரைவில் காலி இடம் எவ்வளவு உள்ளது என்று பாருங்கள. முதலில் குறித்த அளவையும் இதையும் ஒப்பிட்டு பாருங்கள்.நிச்சயம் காலி இடத்தின் அளவு அதிகமாக மாறிஇருக்கும். நான் விண்டோஸ் எக்ஸ்பியில் இந்த முறையை பயன்படுத்தி டிரைவின் இடத்தை அதிகரிக்கின்றேன். நீங்களும முயன்று பாருங்கள்.

 கருத்துக்களை கூறுங்கள்

Tuesday, February 22, 2011

இணைய தளமொன்றைப் பதிவேற்றுவது எப்படி?



ஒரு இணைய தளம் சேமிக்கப்பட்டிருக்கும் வெப் சேர்வர் (Host - ஹோஸ்ட்) கணினிக்கு பைல் ஒன்றை அனுப்பும் செயற்பாட்டைப் பதிவேற்றுதல் (Uploading) அல்லது பதிப்பித்தல் (Publishing) என அழைக்கப்படும்.
ஹோஸ்ட் கணினி FTP எனும் பைல் ட்ரான்ஸ்பர் புரட்டகோலை (File Transfer Protocol) ஆதரிக்குமானால் இந்த செயற்பாட்டிற்கு FTP Client எனும் ஒரு மென்பொருள் கருவி அவசியம். இங்கு நான் (FileZilla) பைல்ஷிலா எனும் மென்பொருள் கருவி கொண்டு எவ்வாறு ஒரு பைலை இணைய தளமொன்றிற்குச் செலுத்துவது என விளக்க நினைக்கிறேன்.

பைல்ஷிலா என்பது ஒரு ஓப்பன் சோர்ஸ் எப்டிபி க்லையன்ட் ஆகும். இதனை நீங்கள் எனும் http://sourceforge.net/projects/filezilla/ இணைய தளத்திலிருந்து இலவசமாக டவுன் லோட் செய்யலாம். FileZilla. 3.3.3 எனும் பதிப்பு தற்போது வெளியிடப் பட்டிருக்கிறது,

எப்.டி.பீ க்ளையண்ட் கொண்டு டெக்ஸ்ட், படங்கள். வீடியோ, இசை என எவ்வகையான பைல்களையும் அப்லோட் செய்யலாம். இணைய தளமொன்றிற்கு பைல் ஒன்றை அப்லோட் செய்வதற்கு முன்னர் நீங்கள் கணக்கு வைத்திருக்கும் அல்லது உங்கள் இணைய தளத்தை ஹோஸ்ட் செய்யும் நிறுவனத்திடமிருந்து பின்வரும் விவரங்களை அறிந்து வைத்திருத்தல் அவசியம்.

உங்கள் இணைய தளம் சேமிக்கப்படிருக்கும் ஹோஸ்ட் கணினியின் பெயர் அல்லது சேர்வர் முகவரி. உதாரணமாக ftp://ftp.example.com/.. FTP கணக்கிற்குரிய பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல். வெப் சேர்வரில் எந்த டிரெக்டரி அல்லது போல்டரில் உங்கள் பைல்களை சேமிக்க வேண்டும் என்ற விவரம். இந்த போல்டர் www அல்ல்து public_html எனும் பெயர்களில் இருக்கலாம். இந்த போல்டரில் சேமிப்பதன் மூலம் மட்டுமே உங்கள் தளத்தை வெப் பிரவுஸரால் கண்டு கொள்ள முடியும்.

பைல் ஒன்றைப் பதிவேற்றுவதற்கு முதலில் பைல்ஷிலா எப்.டி.பீ க்லையண்டைத் திறந்து கொள்ளுங்கள். அங்கு File மெனுவில் Site Manager தெரிவு செய்யுங்கள். தோன்றும் Site Manager விண்டோவில் New Site பட்டனில் க்ளிக் செய்யுங்கள். அப்போது அதன் மேற் பகுதியில் இணைய தளத்தின் பெயரை வழங்குவதற்கு ஏற்றவாறு கர்சர் தோன்றும். அங்கு அந்த தளத்திற்குரிய பொருத்தமான பெயரை வழங்குங்கள். இந்தப் பெயர் உங்கள் தளத்தை அடைவதற்கான இணைய தள முகவரியாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

அடுத்து General டேபின் கீழ் Host எனுமிடத்தில் உங்கள் தளத்திறகான சேர்வர் முகவரியை டைப் செய்யுங்கள். உதாரணமாக ftp://ftp.example.com/. Server type எனுமிடத்தில் FTP தெரிவு செய்யுங்கள். . Port இல்க்கம் வழங்க வேண்டிய அவசியமில்லை

அடுத்து Logon type எனுமிடத்தில் ட்ரொப் டவுன் பட்டியலிலிருந்து Normal தெரிவு செய்யுங்கள். அப்போது User Name மற்றும் Password வழங்கக் கூடியதாக அந்த இடங்கள் மாறும். அவ்விடங்களில் உங்களுக்குத் தரப்பட்டுள்ள பயனர் பெயர் மற்றும் பாஸ்வர்டை வழங்குங்கள்.

நீங்கள் வழங்கும் பயனர் பெயர் மற்றும் பாஸ்வர்ட் விவரங்கள் உங்கள் கணினியில் சேமிக்கப்படும். அதனால் நீங்கள் பைல் அப்லோட் செய்ய விரும்பும் ஒவ்வொரு தடவையும் இந்த விவரங்களை வழங்க வேண்டிய தேவை ஏற்படாது. .

எனினும் இணைய மையங்கள் (Internet café) போன்ற பொது இடங்களில் எப்.டிபீ க்லையண்டுகளைப் பயன் படுத்துவதானால் அப்லோட் செய்யும் பணி முடிந்ததுமே அந்த விவரங்களை அப்போதே கணினியிலிருந்து அகற்றி விட்டு வெளியேறுங்கள்.

அடுத்து உங்கள் சேர்வர் கணினியை அடைவதற்கு Connect பட்டனில் க்ளிக் செய்யுங்கள். சேர்வர் கணினியுடனான இணைப்பு வெற்றிகரமாக அமைந்தால் FileZilla விண்டோவின் வலப்புறம் உங்க்ள் தளத்திற்குரிய பைல் போல்டரகளைப் பட்டியலிடக் (Remote Site) காணலாம். அதேபோல் இடப்புற விண்டோவில் உங்கள் கணினியிலுள்ள (Local Site) பைல் போல்டர் மற்றும் ட்ரைவ்களக் காண்பிக்கும். இந்த இரண்டு விண்டோக்களும் விண்டோஸ் எக்ஸ்ப்லோரர் போல் செயற்படும்.

உங்கள் இணைய தளத்தை ஹொஸ்ட் செய்யும் நிறுவனம் வெப் சேர்வரிலுள்ள www, public_html போன்ற எதேனுமொரு போல்டரை உங்களுக்குப் பரிந்துரைத்திருந்தால் அந்த உரிய போல்டரை வலப்புற விண்டோவில் காண்பிக்கும். அதன் மேல் இரட்டைக் க்ளிக் செய்து திறந்து கொள்ளுங்கள்.

அடுத்து விண்டோவின் இடப்புற விண்டோவில் நீங்கள் அப்லோட் செய்ய விரும்பும் பைலை உங்கள் கணினியிலிருந்து தெரிவு செய்து கொள்ளுங்கள்..
பின்னர் அந்த பைலை ட்ரேக் எண்ட் ட்ரொப் (Drag & Drop) முறையில் இழுத்து வலப்புறம் உள்ள உரிய போல்டரில் போட்டு விடுங்கள். உடனடியாக அந்த பைல் அப்லோட் ஆக ஆரம்பிக்கும். . உங்கள் பைலை அப்லோட் ஆகும் செயற்பாட்டை பைல்ஷிலா விண்டோவின் கீழ்ப் பகுதியில் காண்பிக்கும். . அப்லோட் செயற்பாடு முடிந்தவுடன் சேர்வரிலிருந்து இணைப்பைத் துண்டித்து விடலாம். அதற்கு Server மெனுவிலிருந்து Disconnect தெரிவு செய்யுங்கள்.

ஒரு வேளை உங்கள் தளத்தை ஹோஸ்ட் செய்யும் நிறுவனம் எப்.டி.பீ கொண்டு அணுக விடாமல் த்டுத்திருந்தால் அப்லோட் செய்யும் பணிக்கு வெப் பிரவுஸரையே பயன் படுத்த வேண்டும். என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவ்வாறான சந்தர்ப்பங்களில் இணைய தளங்களை நிர்வகிப்பதற்கான கண்ட்ரோல் பேனல் (Control Panel) எனும் வசதி ஹோஸ்ட் செய்யும் நிறுவனத்தால் வழங்கப்படும்.

WEB MAIL / POP3 MAIL என்ன வேறுபாடு?


மின்னஞ்சலில் வெப் மெயில், பொப் மெயில் என இரு வகைகளுள்ளன. வெப் மெயில் (web mail) எனப்படுவது எல்லோரும் அறிந்ததுதான். இந்த இமெயில் சேவையானது இணைய தளம் (web server) சார்ந்தது,
. இமெயில் சேவை வழங்கும் நிறுவனத்தின் வெப் தளத்தை இணைய உலாவி (web browser) மூலம் அணுகி எமது அடையாளத்தை நிறூபித்து (log in) எமக்கு வந்திருக்கும் இமெயிலைப் பார்ப்பதும் புதிதாக இமெயில் அனுப்புவதும் வெப் மெயில் எனப்படும்.வெப் மெயிலை / அனுப்பும் பெறும் செயற்பாடு வழமையான ஒரு இணைய பக்கத்திலேயே (web page) நடைபெறும். உங்களுக்குப் புதிதாக வந்திருக்கும் மெயில்களையும் முன்னர் வந்த மெயில்களையும் இணையத்தில் இணைவதன்மூலம் மட்டுமே (online) பார்வையிட முடியும்., இணைய இணைப்பின்றி (offline) மெயில்களைப் பார்வையிட முடியாது.

இலவச இமெயில் சேவை வழங்கும் நீறுவனங்கள் அனேகமாக வெப் மெயில் சேவையே வழங்குகின்றன. அதற்கு உதாரணமாக yahoo, Google போன்றவற்றைக் குறிப்பிடலாம் அனேகர் தங்கள் இமெயில் தொடர்பாடலுக்கு இந்த வெப் மெயிலையே பயன் படுத்துகின்றனர்மாறாக எமது இமெயில் கணக்கை நிர்வகிப்பதற்கென வடிவமைக்கப்பட்ட விசேட மென்பொருள் மூலம் மெயில் சேர்வரை அணுகி செய்திகளை அனுப்புவதும் பெறுவதும் பொப் மெயில் எனப்படும். Post Office Protocol என்பதன் சுருக்கமே POP. இது ஒரு தொடர்பாடல் (protocol) விதி முறையாகும். அதாவது இமெயில் ப்ரோக்ரம் அல்லது பொப் களையண்டுக்கும் (POP Client) மின்னஞ்சல் சேவை வழங்கும் நிறுவன சேர்வர் கணினிக்கும் (POP Server) இடையிலான ஒரு தொடர்பாடல் மொழி எனலாம்.
POP3 எனபதில் 3 என்பது அதன் பதிப்பிலக்கத்தைக் (version) குறிக்கிறது. தற்போது பயன் பாட்டிலுள்ள POP3 விதிமுறை பயன் பாட்டுக்கு வருவதற்கு முன்னர் அது சில மாற்றங்களுக்குள்ளானது, அதன் பிறகே POP3 விதி முறை நிர்ணயிக்கப்படுகிறது.

பொப் மெயிலில் இமெயில் அனுப்ப பெற உதவும் மென்பொருளை இமெயில் க்ளையன்ட் (e-mail client அல்லது POP client) எனப்படுகிறது. Outlook, Outlook Express, Eudora, Thunderbird என்பவற்றை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.இமெயில் க்ளையன்ட் கொண்டு ஒரு நேரத்தில் ஒரு இமெயில் கணக்கு மட்டுமன்றி ஒன்றிற்கு மேற்பட்ட இமெயில் கணக்குகளையும் நிர்வகிக்க முடியும். அதன் மூலம் எமது அனைத்து இமெயில் கணக்குகளுக்கும் வந்து சேரும் இமெயில்களை ஒரே நேரத்தில் பார்வையிட முடியும். அத்தோடு மின்னஞ்சல்களை எமது கணினிக்கு டவுன்லோட் செய்து விட்டு நாம் விரும்பிய நேரத்தில் படிக்க முடிவதுடன் அனுப்புகின்ற மெயிலை அழகாக format செய்து கொள்ளவும் முடியும். இதன் மூலம் இணையத்தில் இணைந்திருக்கும் நேரத்தையும் குறைத் திடலாம். இது போன்ற பல வசதிகளைப் பொப் மெயில் தருகிறது.

மெயில்களை அனுப்புவதற்கென மற்றுமொரு ப்ரொட்டோகோல் பயன்படுகிறது., அதனை SMTP (Simple Mail Transfer Protocol) எனப்படும்.. மெயிலை அனுப்பும் SMTP க்லையண்டுக்கும் மெயிலை அனுப்பும் SMTP சேர்வருக்கும் இடையிலான தொடர்பாடல் விதிமுறைகளைக் இது கொண்டுள்ளது பொதுவாக இரண்டு ப்ரொட்டகோல்களிலும் SMTP (server) சேர்வர் ஆகவும் POP3 சேர்வர் ஆகவும் ஒரே கணினியே தொழிற்படுகிறது. , ஒரு பொப் க்ணக்கை உருவாக்குவதற்கு இமெயில்களை சேமித்து வைக்கும் சேர்வர் கணினியின் (POP3 சேர்வர்) பெயர், மெயில்களை அனுப்ப பெற உதவு சேர்வர் கணினியின் பெயர் (SMTP சேர்வர்) மெயில் சேர்வர் நிறுவனத்தால் உங்கள் கணக்கிற்கென வழங்கப்பட்டிருக்கும் பயனர் பெயர் மற்றும் பாஸ்வர்ட் என்பன அவசியம்

பொப் மெயில் போன்று மற்றுமொரு இமெயில் சேவையே IMAP (Internet Message Access Protocol) எனப்படுகிறது. இது பொப் மெயிலை விட அதிக வசதியைத் தருகிறது. இதனையும் பொப் மெயில்களை நிர்வகிக்கும் ப்ரோக்ரம் கொண்டே நிர்வகிக்கலாம். இது எமக்கு வந்து சேர்ந்திருக்கும் மெயில்களை அனைத்தையும் நமது கணினிக்கு டவுன்லோட் செய்து விடாமால் அதன் தலைப்புகளை மட்டும் பார்வையிட்டு தேவையான மெயில்களை மட்டும் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியைத் தருகிறது. IMAP சேவையில் அனைத்து மெயில்களும் சேர்வரிலேயே தங்குகின்றன. அதனால் வெப் மெயில் போன்றே இணையம் ஊடாக எங்கிருந்தும் அணுகலாம்.

எப்போதும் ஒரே கணினியிலிருந்து மாத்திரம் மெயில்களை அணுகுவதாயின் பொப் மெயில்கள் சிறந்தது. மாறாக உங்கள் மெயில்களை பல்வெறு இடங்களிலிருந்து அணுக வேண்டுமயின் IMAP சிறந்தது எனலாம். .உங்கள் கணினியில் டேட்டா இழப்புகள் ஏற்பட்டாலும் உங்களுக்கு வந்து சேர்ந்த இமெயில்களை இழக்க வேண்டியேற்படாது. ஏனெனில் உங்கள் மெயில் சேர்வரில் அவை பாதுகாப்பாக இருக்கும்.

Wednesday, February 16, 2011

ஹேக்கிங் மென்பொருட்கள்(Software)

நண்பர்களே உங்களுக்க சில ஹேக்கிங் மென்பொருட்கள் கீழே கொடுத்துள்ளேன். இது மிகவும் உபயோகமானதும் கூட அதை எப்படி செயவது என்று அதற்கான ஒளி ஒலி சுட்டியும் கொடுத்துள்ளேன். அதைவைத்து செய்து பாருங்கள்.



1. Date Cracker

Date Cracker 2000
                         
Website http://www.e-tech.ca/003-dc2000.asp
Download Page http://adf.ly/pDDy
File size 1.5 MB
Video Tutorial http://www.wonderworks.ca/nbia/dc2000.wmv

இதற்கான உதவி குறிப்பு சுட்டி


2. Advanced Port Scanner

இது உங்களுடைய நெட்வொர்க்கில் உள்ள கணணியில் என்ன போர்ட் திறந்த உள்ளது என்று கண்டறியலாம்.


Advanced Port Scanner download
Website http://www.radmin.com/products/utilities/portscanner.php
Download Page http://adf.ly/pDGI
File size 426 KB
Operating System Windows 95/98/ME/NT4.0/2000/XP/2003/Vista/2008
License: Free



3. Oph CracK

இதன் மூலம் உங்களுடைய விண்டோஸ் பாஸ்வேர்டை Crack செய்யலாம்.


Ophcrack download
Website http://ophcrack.sourceforge.net/
Download Page http://adf.ly/pDHD
File size 4.90 MB
Video Tutorial Video

4 . PC Activity Monitor

இந்த மென்பொருள் மூலம் உங்கள் கணணியை உங்கள் நண்பர் அல்லது வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தாளிகள் உபயோகபடுத்தும் போது இந்த மென்பொருள் மூலம் கண்காணிக்கலாம். இதனால் உங்கள் நண்பர் எந்த வலைத்தளங்கள் செல்கிறார் என்ன சாட்டிங் செய்கிறார் எந்த கோப்புகளை தரவிறக்குகிறார் போன்ற அநேக தகவல்களை நமக்கு காட்டி கொடுக்கிறது.
இது தனி கணனி மட்டுமல்லாமல் நெட்வொர்க கணணிகளிலும் கண்காணிக்கிறது.


PC Activity Monitor download
Website http://3d2f.com/programs/0-545-pc-activity-monitor-pro-download.shtml
Download Page http://adf.ly/pDIV
File size 1192 kb
License Shareware
Operating System Windows 95, Windows 98, Windows ME, Windows NT, Windows 2000, Windows XP


5. Cain & Abel

இந்த மென்பொருள் மூலம் உங்களுடைய நெட்வொர்க் கணணியின் பாஸ்வேர்ட்கள் அனைத்தும் கண்டுபிடித்து தருகிறது.


Cain & Abel download
Website http://www.oxid.it/cain.html
Download Page http://adf.ly/pDJV
File size 660 KB
License Freeware
Operating System Windows iNT/2000/XP

6. Super Scan

இந்த மென்பொருள் மூலம் உங்கள் நெட்வொர்க்கில் உள்ள junk கோப்புகளை நீக்க முடியும்.


SuperScan download
Website http://www.snapfiles.com/publishers/foundstone-inc/index.html
Download Page http://adf.ly/pDK0
File size 196 kb
License Freeware
Operating System Windows 2000/XP


7. DumpAutoComplete

இந்த மென்பொருள் மூலம் பயர்பாக்ஸில் சேமிக்கப்பட்ட AutoComplete Forms மற்றும் XML கோப்புகள் தானாகவே நீக்கிவிடும்.


DumpAutoComplete v0.7 download
Website http://www.foundstone.com/us/resources/proddesc/dumpautocomplete.htm
Download Page http://adf.ly/pDKj
License Freeware



இது அல்லாமல் மற்ற ஹேக்கிங் டூல்கள் கீழே வரிசையாக கொடுத்துள்ளேன். கீழே இருப்பதை எனக்கு உபயோகபடுத்த நேரமில்லாத காரணத்தால் நேரடியாக கொடுத்துள்ளேன். நீங்கள் உபயோகபடுத்தி அதனுடைய பயன்களை பின்னூட்டமிட்டால் மிகவும் உதவியாக இருக்கும் எனக்கும் மற்றவர்களுக்கும்.

1. Yersinia

Yersinia download
Website http://www.yersinia.net/
Download Page http://adf.ly/pDLa

2. Putty


PuTTY download
Website http://www.chiark.greenend.org.uk/~sgtatham/putty/
Download Page http://adf.ly/pDMA
File size 196 kb
License Freeware
Operating System Windows 2000/XP


3.  Nessus


Nessus download
Website http://www.nessus.org/nessus/
Download Page http://adf.ly/pDMm
File size 26.51MB
License Freeware


4. Hiping


Hping download
Website http://www.hping.org//
Download Page http://adf.ly/pDPw
License Freeware
Operating System Linux, FreeBSD, NetBSD, OpenBSD, Solaris, MacOs X, Windows


5.  Cowpatty

coWPAtty download
Website http://wirelessdefence.org/Contents/coWPAttyMain.html
Download Page http://adf.ly/pDQd
License Freeware
 



ஹேக்கிங் மென்பொருட்கள் சில


1. Date Cracker

 
Date Cracker 2000 download
Website http://www.e-tech.ca/003-dc2000.asp
Download Page http://www.wonderworks.ca/nbia/dc20000.zip
File size 1.5 MB
Video Tutorial http://www.wonderworks.ca/nbia/dc2000.wmv

இதற்கான உதவி குறிப்பு சுட்டி


2. Advanced Port Scanner

இது உங்களுடைய நெட்வொர்க்கில் உள்ள கணணியில் என்ன போர்ட் திறந்த உள்ளது என்று கண்டறியலாம்.


Advanced Port Scanner download
Website http://www.radmin.com/products/utilities/portscanner.php
Download Page http://www.download.com/Advanced-Port-Scanner
File size 426 KB
Operating System Windows 95/98/ME/NT4.0/2000/XP/2003/Vista/2008
License: Free



3. Oph CracK

இதன் மூலம் உங்களுடைய விண்டோஸ் பாஸ்வேர்டை Crack செய்யலாம்.


Ophcrack download
Website http://ophcrack.sourceforge.net/
Download Page http://ophcrack.sourceforge.net/download.php?type=ophcrack
File size 4.90 MB
Video Tutorial Video

4 . PC Activity Monitor

இந்த மென்பொருள் மூலம் உங்கள் கணணியை  உங்கள் நண்பர் அல்லது வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தாளிகள் உபயோகபடுத்தும் போது இந்த மென்பொருள் மூலம்  கண்காணிக்கலாம். இதனால் உங்கள் நண்பர் எந்த வலைத்தளங்கள் செல்கிறார் என்ன சாட்டிங் செய்கிறார் எந்த கோப்புகளை தரவிறக்குகிறார் போன்ற அநேக தகவல்களை நமக்கு காட்டி கொடுக்கிறது.
இது தனி கணனி மட்டுமல்லாமல் நெட்வொர்க கணணிகளிலும் கண்காணிக்கிறது.


PC Activity Monitor download
Website http://3d2f.com/programs/0-545-pc-activity-monitor-pro-download.shtml
Download Page http://download.softsecurity.com/5/6/pca_pro.zip
File size 1192 kb
License Shareware
Operating System Windows 95, Windows 98, Windows ME, Windows NT, Windows 2000, Windows XP


5. Cain & Abel

இந்த மென்பொருள் மூலம் உங்களுடைய நெட்வொர்க் கணணியின் பாஸ்வேர்ட்கள் அனைத்தும் கண்டுபிடித்து தருகிறது.


Cain & Abel download
Website http://www.oxid.it/cain.html
Download Page http://www.oxid.it/cain.html
File size 660 KB
License Freeware
Operating System Windows iNT/2000/XP

6. Super Scan

இந்த மென்பொருள் மூலம் உங்கள் நெட்வொர்க்கில் உள்ள junk கோப்புகளை நீக்க முடியும்.


SuperScan download
Website http://www.snapfiles.com/publishers/foundstone-inc/index.html
Download Page http://www.snapfiles.com/download/dlsuperscan.html
File size 196 kb
License Freeware
Operating System Windows 2000/XP


7. DumpAutoComplete

இந்த மென்பொருள் மூலம் பயர்பாக்ஸில் சேமிக்கப்பட்ட AutoComplete Forms மற்றும் XML கோப்புகள் தானாகவே நீக்கிவிடும்.


DumpAutoComplete v0.7 download
Website http://www.foundstone.com/us/resources/proddesc/dumpautocomplete.htm
Download Page http://www.foundstone.com/us/resources/termsofuse.asp?file=dumpautocomplete.zip
License Freeware


இது அல்லாமல் மற்ற ஹேக்கிங் டூல்கள் கீழே வரிசையாக கொடுத்துள்ளேன். கீழே இருப்பதை எனக்கு உபயோகபடுத்த நேரமில்லாத காரணத்தால் நேரடியாக கொடுத்துள்ளேன். நீங்கள் உபயோகபடுத்தி அதனுடைய பயன்களை பின்னூட்டமிட்டால் மிகவும் உதவியாக இருக்கும் எனக்கும் மற்றவர்களுக்கும்.

1. Yersinia

Yersinia download
Website http://www.yersinia.net/
Download Page http://www.yersinia.net/download.htm

2. Putty


PuTTY download
Website http://www.chiark.greenend.org.uk/~sgtatham/putty/
Download Page http://www.chiark.greenend.org.uk/~sgtatham/putty/download.html
File size 196 kb
License Freeware
Operating System Windows 2000/XP


3.  Nessus


Nessus download
Website http://www.nessus.org/nessus/
Download Page http://www.nessus.org/download/
File size 26.51MB
License Freeware


4. Hiping


Hping download
Website http://www.hping.org//
Download Page http://www.hping.org/download.php
License Freeware
Operating System Linux, FreeBSD, NetBSD, OpenBSD, Solaris, MacOs X, Windows


5.  Cowpatty


coWPAtty download
Website http://wirelessdefence.org/Contents/coWPAttyMain.html
Download Page http://sourceforge.net/project/downloading.php?group_id=123588&use_mirror=freefr&filename=cowpatty-2.0.tgz&a=31536266
License Freeware
  

Saturday, February 12, 2011

Temporary Fileகளை நீக்க சிறந்த வழிகள்.


டெம்பரரி ஃபைல்கள் அல்லது tmp files என அழைக்கப்படுபவை நீங்கள் கணினியில் ஒரு ஃபைலையோ அல்லது மென்பொருளையோ பயன்படுத்தும் போது தாமாகவே உருவாகும்.இவை எந்தவித வைரஸ்களும் அல்ல.எனவே நீங்கள் Anti-virusகொண்டு Tem fileகளை ஸ்கேன் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.ஒவ்வொரு டெம்பரரி ஃபைலும் ` என்ற குறியை ஃபைலின் பெயரோடு இணைத்திருக்கும்.சான்றாக நீங்கள் ஏதாவது வேர்ட்(Ms-Word) ஃபைலை பயன்படுத்தும் போது ஃபைலானது .tmp போன்ற பெயரில் உருவாகும்.` குறியை வைத்து குறிப்பிட்ட ஃபைலானது Temporary ஃபைல் என்று அறிந்துகொள்ளலாம்.பொதுவாகவே tmp ஃபைல்கள் உங்கள் ஹார்ட்டிஸ்க்கில் இடத்தை விணாக்குபவைகளாகும்.எனவே இவற்றை எனவே இவற்றை குறிப்பிட்ட கால கட்டங்களில் அழித்துவிடுவது நல்லது.tmp ஃபைல்களை நீங்களாகவோ அல்லது ஏதாவது டூலை கொண்டோ அழிக்கலாம்.

  1. Disk defregment பயன்படுத்தினால் உங்கள் ஹார்ட்டிஸ்க்கில் வேண்டாத ஃபைல்கள் குவிந்துள்ள இடத்தினை மீட்கலாம்.Disk defregment பயன்படுத்துவதன் மூலம் tmp ஃபைல்களையும் அழிக்க முடியும்.
  2. My computer Iconஐ திறந்து C Driveஇனுள் உள்ள Windows Folderஐ திறந்து அதனுள் உள்ள Temp ஃபோல்டரை திறந்து அதனுள் உள்ள ஃபைல்களை அழித்து விடுங்கள்..
  3. Start menu-->Programes-->Accessories-->System Tools வரை Browse செய்யுங்கள் அங்கு Maintenance Wizard Optionஐ தேர்வு செய்து டேம்பரரி ஃபைல்களை அழிக்கலாம்.
  4. அல்லது Run இற்கு சென்று (Windows7 பாவனையாளராக இருந்தால் Search option இல்) .tmp என தேடி அழிக்கலாம்.
  5. இந்த வழிகள் ஒன்றும் பிடிக்க வில்லையென்றால் Tmp ஃபைல்களை அழிக்க நீங்களே எளிய ஒரு Uttility உருவாக்கலாம்,Notepad ஐ திறந்து 

C:>copy com a.bat
del/f/s/1 *.*tmp
என டைப் செய்து .bat என்ற பெயரில் டெக்ஸ்டாப்பில் Save செய்து கொள்ளுங்கள்..இனி tmp ஃபைல்கள் உருவாகும் போதெல்லாம் இதனை இரட்டைகிளிக் செய்து ஃபைல்களை அழிக்கலாம்..ஆனால் கணினிமென்பொருள் தேர்ச்சிபெற்றவருடன் இந்த செய்முறைகளை பரிட்சித்து பார்க்கவும்.
06.இவை தவிர டெம்பரரி ஃபைல்களை அழிக்க இணையத்தில் அதிய மென்பொருள்கள் கிடைக்கின்றன..அவை பற்றி இன்னுமொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்..

Friday, February 11, 2011

இந்த நிறுவனங்களுக்கு பெயர்வந்தது எப்படி?



ஆப்பிள் கம்ப்யூட்டர்
இன்றைய கம்யூட்டர் உலகத்தில் ஆப்பிள் கம்பியூட்டரை பற்றி கேள்விப்படாதவர்களே இல்லை.ஆனால் இவர்களில் யாராவது இந்த
நிறுவனத்திற்கு பெயர் எப்படு சூட்டப்பட்டது என நினைத்துப்பார்திருக்கிரீர்களா? இந்த நிறுவனத்தை தோற்றுவித்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ
(Steve Jobs) இவருக்கு மிகவும் பிடித்தமான பழம் ஆப்பிள்தான்.அவர் தன் நிறுவனத்திற்கு மூன்று மாதங்கள் தாமதித்துவிட்டார்.பிறகு
அவர் சக ஊழியர்களிடம் நீங்கள் ஒருவரும் இதைவிட சிறந்த பெயர் தெரிவிக்காவிட்டால் ஆப்பிள் என்ற பெயரையே நம் நிறுவனத்தின்
பெயராக வைத்து விடுவேன் என்று கூறினாராம்.பிறகு இந்தப் பெயரே நிலைத்து விட்டது.

கூகிள்

இது முதன் முதலாக கூகால்(Googol)என்று அழைக்கப்பட்டது.கூகால் என்றால் ஒன்றின் பின்னால் நூறுசைபர்கள் போட்டால் வரும்
எண் பெறுமானமாகும்.இந்த நிறுவனத்தை தோற்றுவித்தவர்கள் செர்கீபிரின் மற்றும் லாரிபேஜ் (Sergeybrin and Larrypage) இவர்கள்
தங்கள் ப்ராஜெக்டைஒரு angel inrestor இடம் சமர்பித்தார்கள்.அவர்களுக்கு அனுப்பப்பட்ட காசோலையில் கூகிள்(Google) என்று
எழுதப்பட்டிருந்தது.இன்று இந்தப் பெயரே நிறிவனத்தின் பெயராகமாறி மிகவும் புகழ் பெற்றுவிட்டது.


மைக்ரோசாஃப்ட்

இந்தப் பெயரை தேர்ந்தெடுத்தவர் பில்கேட்ஸ்(Billgates) இந்த நிறுவனம் மைக்ரோ கம்பியூட்டர்களுக்கான சாப்ட்வேர் தயாரிப்பதால்
இந்தப் பெயர் பொருத்தமாக இருந்தது.முதன் முதலில் Micro-soft என்று நடுவில் ஒரு கோடுடன் (Hyphen) எழுதப்பட்டது. பிறகு
இந்தக்கோடு மறைந்துவிட்டது.



ஹாட் மெயில்








இதைத் தோற்றுவித்தவர் ஜாக் ஸ்மித்(Jacksmiith) உலகத்தில் கம்ப்யூட்டர் எங்கிருந்தாலும் வெப்மூலம் ஈ-மெயிலை அணுக ஒரு வழி
வேண்டும் என்ற ஐடியா இவருக்கு தோன்றியது.இதனிடையே சபீர்பாடியா (Sabeer bhatia) என்பவர் தன் பிசினஸ் பிளானுக்கு அதாவது
மெயில் சர்வீசுக்கு பெயர்தேடிக் கொண்டிருந்தார்.அந்தப் பெயர் மெயில் என்று முடிய வேண்டும் என்று விருப்பப்பட்டார். கடைசியில்
ஹாட்மெயில் என்ற பெயரை தேர்ந்தெடுத்தார்.அந்தச் சொல்லில் எச்டிஎம்எல் என்ற எழுத்துக்கள் உள்ளன என்பதை கவனியுங்கள். முதன்
முதலில் அது HoTMail அதாவது H,T,M,L என்பவை பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தன. 

உங்கள் டெஸ்க்டாப் வால்பேப்பரே உங்களை பற்றி சொல்லும்: புதிய வால்பேப்பர் சேவை


உங்கள் டெஸ்க்டாப் வால்பேப்பரே உங்களைப்பற்றி மற்றவர்களுக்கு சொல்ல வேண்டும் என்று விரும்பினீர்கள் என்றால் வால்காஸ்ட்(Wall Cast)  சேவையைப் பயன்படுத்தலாம்.

வால்காஸ்ட்(Wall Cast) என்பது மிகவும் எளிதான மற்றும் புதுமையான சேவை. நாம் அனைவரும் விரும்பும் ஒன்று நமது கம்ப்யூட்டர் திரை வெறுமையாக இல்லாமால் கண்ணுக்கு இனிய வகையில் இருக்க வேண்டும் என்பதே. இதற்காக பல அழகிய காட்சிகளை கம்ப்யூட்டர் திரையில் தோன்றும் வ‌கையில் வால்பேப்பராக பயன்படுத்துகிறோம் அல்லது நம்மிடம் உள்ள புகைப்படத்தை அமைத்து கொள்கிறோம்.
வால்காஸ்ட் வழங்கும் சேவை என்னவென்றால், இதில் உறுப்பினராகி உங்களிடம் உள்ள புகைப்படங்களை சம்ர்ப்பித்தீர்கள் என்றால் வால்காஸ்ட் அவற்றை அழகான வால்பேப்பராக மாற்றி  தருகிறது. அதன் பிறகு உங்கள் கம்ப்யூட்ட்ரை பார்த்தால் வரிசையாக புகைப்படங்கள் ஓடிக்கொண்டிருக்கும்.
இதன் முக்கிய அம்சம் என்னவென்றால்,இதில் புதிய படங்களை பதிவேற்றும் போது உடனே அவற்றை வால்பேப்பராக மாற்றி விடுகிறது.எனவே கம்ப்யூட்டரின் திரை எப்போதுமே புதிப்பிக்கப்பட்டதாக இருக்கும்.
புகைப்படங்களை பெரிதாக்குவதோ,டெலிட் செய்வதோ சுலபம். அதே போல் உங்கள் நண்பர்கள் அனுப்பி வைக்கும் படங்களையும் இடம் பெற வைக்கலாம்.உங்களுக்கான பக்கம் மை வால்பேப்பராக உருவாக்கி தரப்படும்.அதன் மூலம் உங்கள் ப‌டங்களை விருப்பம் போல நிர்வகித்து கொள்ளலாம்.
படங்களை முழுவதுமாக பகிர்ந்து கொள்ளலாம்.நண்பர்கள் பார்வைக்கு என்று சுருக்கியும் கொள்ளலாம்.ஐபோன் போன்றவற்றில் இருந்து படம் எடுத்த கையோடு படங்களை பதிவேற்றும் வசதியும் உண்டு.எமெயில் மூலமும் படங்களை இணைக்கலாம்.
பேஸ்புக்கில் புகைப்படங்களை நண்பர்கள் பார்க்க பகிர்ந்து கொள்வது போல டெஸ்க்டாப் மூலமே படங்களை பகிர்ந்து கொள்ள வால்காஸ்ட் வழி செய்கிற‌து.
உங்கள் வால்பேப்பருக்கு உயிர் கொடுங்கள் என்று அழைக்கும் இந்த தளம் அதனை அழகாக செய்து காட்டுகிறது.

உங்கள் கணினியை தொலைவில் உள்ள நண்பர்களுடன் பகிர்வது எப்படி?


அதுபோல உங்கள் கணினியின் திரையை தொலைவில் உள்ள நண்பர்கள் பார்ப்பதற்கும், அங்கே இருந்தபடி உங்கள் கணினியையே இயக்கவும் உதவும் ஒரு மென்பொருள்தான் டீம்வியூவர்.


உங்கள் கோப்புகளை ஏதேனும் கோப்புப்பகிர்வான் (File sharing) தளங்களில் ஏற்றி அதன் சுட்டியை நண்பர்களுக்குக் கொடுத்து அவர்களை இணையிறக்கம் (Download) செய்யச் சொல்லி கோப்புகளைப் பகிர்ந்து மகிழ்ந்தவர்கள் இணையத்தில் எத்தனையோ பேர்.
இந்த சுட்டியினை அழுத்தி மேலே தோன்றும் வலைப்பகுதிக்கு செல்லவும். அதில் தரவிறக்கம்(Download) என்ற பகுதியை அழுத்தியவுடன்
கீழே உள்ளது போல் ஒரு pop-up window தோன்றியது
அதில் (Save) என்ற பித்தானை அழுத்தி வழக்கமாக சேமிக்கும் பகுதியில் தரவிறக்கம் செய்யவும்
பின்னர் அந்த கோப்பை (TeamViewer_Setup.exe) இரண்டுமுறை கிளிக்கியவுடன்
கீழே உள்ளது போல் ஒரு pop-up window தோன்றும்
மேலே உள்ளதில் (Run) என்ற பித்தானை அழுத்தவும்
மேலே இருக்கும் பகுதியில் (Install – Run) இருந்தது.
அதில் (Run) என்பதை அழுத்தி பிறகு (Next)ஐ கிளிக் செய்யவும்
மேலே உள்ள (Agreement)ஐ டிக்கிவிட்டு (Next)அழுத்தவும்
(விஸ்டாவாக இருந்தால் (Unblock)ஐ அழுத்தவும்)
அவ்வளவு தான் நிறுவியாயிற்று.
(இதுவரை சொல்லியது மாதிரி இரண்டு பக்க கணினியிலும் நிறுவ வேண்டும்.)
இனி எப்படி உபயோகிப்பது என்று பார்ப்போம்.
இரண்டு பக்கங்களிலும் இது போல் ஒரு சாளரம் தோன்றும்.
Wait for Session Create Session
ID ID ………………………
Password
ID என்ற இடத்தில் உள்ள 9 இலக்க எண்களையும்
password என்ற இடத்தில் உள்ள 4 இலக்க எண்களையும் நீங்கள் – மற்றவரிடம் சொல்ல.
வலப்பக்கம் ID என்ற இடத்தில் தொடர்ச்சியாக 9 இலக்க எண்ணை இட்டு பின் (Remote Support) என்ற தேர்வை தேர்வு செய்து பிறகு (connect to partner) என்ற பித்தானை அழுத்தினார்கள்
பின் தோன்றும் இந்த சாளரத்தில் 4 இலக்க எண்ணை தட்டச்சு செய்து (Log On) என்ற பித்தானை அழுத்தியவுடன் உங் கள் கணினி மற்றவரின் சாளரத்தில் தோன்றியது.
சில வினாடிகளுக்குள்ளாகவே உலகின் ஏதோ ஒரு இடத்தில் உள்ள நண்பரது கணினியையும், உங்களது கம்ப்யூட்டரையும் இணைத்து அவரது கணினியை நீங்களும், உங்கள் கணினியை அவரும் இயக்கலாம்.
கோப்புகளைப் பகிர்வதும், இணைய அரட்டை (chat) அடிப்பதும் இதில் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது.
வணிக ரீதியில்லாத, தனிமனிதப் பயன்பாடுகளுக்கு இந்த அப்ளிகேசன் இலவசமாகவே கிடைக்கிறது.
தொலைதூரத்தில் உள்ள சர்வர்களை (remote server) இங்கிருந்தே இயக்கவோ, மறுபடி துவக்கவோ (Reboot) இயலும்.
நிறைவான பாதுகாப்பையும் (hight security), அது உயர் வேகத்தையும் டீம்வியூவரிடம் எதிர்பார்க்கலாம்.
ஃபயர்வால் (firewall) பாதுகாப்புச் சுவர் போன்றவற்றை பல நேரங்களில் ரிமோட் டெஸ்க்டாப் (Remote Desktop) ஊடுருவாது.
ஆனால் ஃபயர்வால் பிரச்சினைகளை டீம்வியூவர் எதிர்கொள்வதில்லை. ஏதேனும் ஒரு மென்பொருள் பயன்பாட்டை கணினியில் install செய்வதற்கு அட்மினிஸ்ட்ரேட்டர் உரிமம் தேவைப்படும். ஆனால் டீம்வியூவரை இன்ஸ்டால் செய்வதற்கு Administrator உரிமம் தேவைப்படாது.