Thursday, December 9, 2010

தமிழ்த்திரட்டிகளுக்கு ஜன்னல் ஓட்டுப்பட்டை அறிமுகம்....

தமிழ் வாசகர் வட்டம் பற்றித் தெரியாத காலத்தில் முதல் முதலாக பதிவு இட்டு வருங்காலத்தில் மக்கள் பாடிப்பார்கள் என்று எண்ணிக்கொண்டு வெறும் ஒன்றிரண்டு புதிய ஹிட்களை எண்ணிப் பெருமைப்பட்ட காலமுண்டு. மெல்ல மெல்ல திரட்டிகளின் வாசமும் அதில் வாசகரின் நேசமும் வலைப்பக்கங்களில் வீசத் தொடங்கிய நாள் முதல் எல்லையில்லா ஆனந்தமும் கொண்டதுண்டு. சில சமயம் எல்லாத் திரட்டிகளையும் தேடித் தேடி இணைத்ததுண்டு ஆனால் ஓட்டுப் பட்டைகளைப் பக்கத்தில் இணைப்பதால் அழகு குறையுமோ என தவிர்த்ததுண்டு.


இன்று ஒரு மாறுதலுக்காக ஜன்னல் வகை ஓட்டுப்பட்டையை வடிவமைத்திருக்கிறேன் [பிளாக்கர்.காம்]. அனுபவப்பட்ட பதிவர்களைவிட புதியவர்களுக்கு இந்த பட்டை மிகவும் உதவும் என நம்புகிறேன். அப்படியென்ன ஜன்னல் வகைஎன்றால்? இந்தப் பக்கத்தின் கீழே ஓட்டுப்பட்டை மூடிய நிலையில் உள்ளது அதனை  சொடிக்கி அனைத்து முக்கிய ஓட்டுப் பட்டையையும் காணலாம். மூடித் திறக்கும் செயல்பாட்டுடன் இருப்பதால் இப்பெயர் பொருந்தும் என நினைக்கிறேன். ஓட்டுப்பட்டைகளின் மூலம்  அதிகமான பக்கம் மறைக்கப்படுகிறது என்ற நிலையில்லை. மற்றும் புதியவர்களுக்கு அனைத்துப் பட்டையும் ஒரே இடத்தில் ஓட்டு எண்களுடன் கிடைக்கும்.


பிரதான சிங்கங்கள் தமிழ்மணம் மற்றும் இன்ட்லி வழமை மாறாமல் இணைக்கப்பட்டுள்ளது. தமிழ்10, உலவு, தமிழ்பெஸ்ட், இதமிழ், மற்றும்  இதர ஓட்டுப்பட்டை வசதி தரும் தளங்களும் உள்ளது. இலங்கை பதிவர்களுக்காக யாழ்தேவி கருவிப்பட்டையும் உள்ளது.


இதற்கிடையில் முன்பு ஒருமுறை ஒரு பிரதான திரட்டியொன்றின் ஓட்டுப்பட்டை செயலிழந்துப் போனபோது அந்தப் பட்டையை இணைத்துக் கொண்ட தளங்கள் திறப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதைக் கணக்கில் கொண்டு பயனர் இடைமுக வசதியுடன்[user interface] ஒரு இயக்கி நீங்கள் விரும்பும் திரட்டியினை மட்டும் இணைத்து ஜன்னல் பட்டையைத் தருகிறது.


விரும்பிய  திரட்டிகளில் மட்டும் இந்த மூடித் திறக்கும் வகையில் இணைத்துக் கொள்ளலாம்.



இணைப்பத்தெப்படி?
முன்பே, ஏதேனும் ஓட்டுப் பட்டைகள் இணைத்திருந்தால் அந்த நிரலியை நீக்கிவிடுவது சிறப்பாகயிருக்கும்.
எப்போதும்   போல பிளாக்கர். காமில் நுழைந்து Dashboard-> design-> Edit HTML அடுத்து உங்கள் நிரலிகளை Expand செய்யவும் </data:post.body> என்பதைத் தேடி அதன் கீழே நமது நிரலியைப் போடவும். [மேலதிக விவரமாகப் பார்க்க இன்ட்லியின் ஓட்டுப்பட்டைadd-indli-voting-widget-blogger-tamil  இணைக்கும் படங்களைப் பார்க்கவும் ஆனால் நிரலியை மட்டும் இங்கிருந்து எடுத்துக் கொள்ளவும் ]


tamil-vote-button-generator.html
இந்தப் பக்கம் சென்று நீங்கள் விரும்பி தலைப்பைக் கொடுத்து வேண்டிய திரட்டியைத் தேர்வு செய்துக் கொண்டால் தானாக நிரலிகள் கிடைக்கும் அந்த நிரலியை மேற்கூறிய இடத்திலிட்டால் இந்தப் பட்டை வரும். சாதாரண நிலையில் பட்டை மூடியிருக்கும் அதனால் சுவாரசிய தலைப்பிட்டு ஓட்டிடுபவரை உற்சாகப்படுத்தலாம்.

பதிவு பிடித்திருந்தால் மறக்காம எனக்கு ஓட்டுப்போடவும்...

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

useful.Thanks for sharing.

Admin said...

Good Info Thansk.

https://www.tamilinfotek.com/

Post a Comment