RSS டாக்குமெண்டில் தகவல்களின் சுருக்கமாகவோ அல்லது முழு எழுத்து வடிவமாகவோ இருக்கும். நீங்கள் விரும்பும் வெப்தளங்களின் RSS Feed ஐ பதிவு  செய்துவிட்டால்(Subscribe) அந்த வெப்தளங்களின் புதுப்பிக்கப்பட்ட தகவல் சுருக்கங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்க பெறுவீர்கள்.
RSS ல் பதிவு செய்ய feed லிங்க் வழியாகவோ அல்லது RSS ஐக்கான் மூலமாகவோ செய்யலாம்.

உதாரணத்திற்கு tipstouse.comமின் RSS Feed ஐ பதிவு செய்யும் முறை :
• Tipstouse.com என்ற தளத்திற்கு செல்லவும்.

•அங்கே உள்ள  RSS ஐக்கானை அழுத்தினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவம் திறக்கும்.
• அதில் (Subscribe to this feed using:) எது வழியாக feed வேண்டும் என்பதை தேர்வு செய்யவும்.
• பின்பு Subscribe now என்ற பட்டனை அழுத்தவும்.
• உதாரனமாக கூகிள் என்று நீங்கள் தேர்வு செய்தால், கூகிள் பின்வரும் இரண்டு வகையில் புதுப்பிக்கப்பட்ட தகவல்களை பார்க்கும் வசதியை கொடுக்கும்.
• Add to Google Home Or Add Google Reader
• அதில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம்.