Friday, February 11, 2011

உங்கள் டெஸ்க்டாப் வால்பேப்பரே உங்களை பற்றி சொல்லும்: புதிய வால்பேப்பர் சேவை


உங்கள் டெஸ்க்டாப் வால்பேப்பரே உங்களைப்பற்றி மற்றவர்களுக்கு சொல்ல வேண்டும் என்று விரும்பினீர்கள் என்றால் வால்காஸ்ட்(Wall Cast)  சேவையைப் பயன்படுத்தலாம்.

வால்காஸ்ட்(Wall Cast) என்பது மிகவும் எளிதான மற்றும் புதுமையான சேவை. நாம் அனைவரும் விரும்பும் ஒன்று நமது கம்ப்யூட்டர் திரை வெறுமையாக இல்லாமால் கண்ணுக்கு இனிய வகையில் இருக்க வேண்டும் என்பதே. இதற்காக பல அழகிய காட்சிகளை கம்ப்யூட்டர் திரையில் தோன்றும் வ‌கையில் வால்பேப்பராக பயன்படுத்துகிறோம் அல்லது நம்மிடம் உள்ள புகைப்படத்தை அமைத்து கொள்கிறோம்.
வால்காஸ்ட் வழங்கும் சேவை என்னவென்றால், இதில் உறுப்பினராகி உங்களிடம் உள்ள புகைப்படங்களை சம்ர்ப்பித்தீர்கள் என்றால் வால்காஸ்ட் அவற்றை அழகான வால்பேப்பராக மாற்றி  தருகிறது. அதன் பிறகு உங்கள் கம்ப்யூட்ட்ரை பார்த்தால் வரிசையாக புகைப்படங்கள் ஓடிக்கொண்டிருக்கும்.
இதன் முக்கிய அம்சம் என்னவென்றால்,இதில் புதிய படங்களை பதிவேற்றும் போது உடனே அவற்றை வால்பேப்பராக மாற்றி விடுகிறது.எனவே கம்ப்யூட்டரின் திரை எப்போதுமே புதிப்பிக்கப்பட்டதாக இருக்கும்.
புகைப்படங்களை பெரிதாக்குவதோ,டெலிட் செய்வதோ சுலபம். அதே போல் உங்கள் நண்பர்கள் அனுப்பி வைக்கும் படங்களையும் இடம் பெற வைக்கலாம்.உங்களுக்கான பக்கம் மை வால்பேப்பராக உருவாக்கி தரப்படும்.அதன் மூலம் உங்கள் ப‌டங்களை விருப்பம் போல நிர்வகித்து கொள்ளலாம்.
படங்களை முழுவதுமாக பகிர்ந்து கொள்ளலாம்.நண்பர்கள் பார்வைக்கு என்று சுருக்கியும் கொள்ளலாம்.ஐபோன் போன்றவற்றில் இருந்து படம் எடுத்த கையோடு படங்களை பதிவேற்றும் வசதியும் உண்டு.எமெயில் மூலமும் படங்களை இணைக்கலாம்.
பேஸ்புக்கில் புகைப்படங்களை நண்பர்கள் பார்க்க பகிர்ந்து கொள்வது போல டெஸ்க்டாப் மூலமே படங்களை பகிர்ந்து கொள்ள வால்காஸ்ட் வழி செய்கிற‌து.
உங்கள் வால்பேப்பருக்கு உயிர் கொடுங்கள் என்று அழைக்கும் இந்த தளம் அதனை அழகாக செய்து காட்டுகிறது.

0 comments:

Post a Comment