Wednesday, November 24, 2010

கையடக்க தொலைபேசி வரமா?சாபமா?

இன்டெக்ஸ் நிறுவனம் அண்மையில் மூன்று மற்றும்,இரண்டு சிம்களுடன் இரண்டு சிம்களுடன் இயங்கும் இரண்டு மொபைல் போன்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
இரண்டு ஜி.எஸ்.எம் மற்றும்,ஒரு சி.டி.எம்.ஏ என மூன்று சிம்களை இயக்கும் போனாக index in5030 வெளிவந்துள்ளது.ஒரு ஐp.எஸ்.எம் சிம் இயங்குகையில் சி.டி.எம்.ஏ சிம் இணைப்பு இயங்கும். இரண்டிலும் அழைப்புக்கள் வந்தாலும் மாற்றி மாற்றிப் பேசிக்கொள்ளும் வசதியை இந்தப் போன் தருகிறது.
4420மொடல் போன் இரண்டு ஜி.எஸ்.எம் சிம்களுடன் இயங்குகிறது.இந்தப் போனில் வித்தியாசமான ஒரு வசதியுள்ளது. “இதன்மூலம் இலங்கை ரூபாவில் போலியான ரூபா நோட்டுக்களை கண்டறியலாம்” நெட்வேர்க் இணைப்பில் இருக்கையில் போனை அழைப்பவர் அல்லது அழைக்கப்படுபவர் எந்த ஏரியாவில் உள்ளார் என்றும் அறியலாம்.இப்போன்களில் எப்.எம் ரேடியோ, வீடியோபிளேயர், கமரா, புளுரூத், பெர்சனல் கம்பியுட்டருடன் இணைந்த செயலாக்கம்,  மொடம்,வெப்கொம்,போன்ற வசதிகளுடன் 4ஜி.பி வரை மெமரியை அதிகமாக்கும் வசதியும் உள்ளது.

யாழ்ப்பாணத்தில் தற்போது பாவணையிலுள்ள போன் மாதிரிகளாக நொக்கியா,மோட்ரோலா, ஈடெல், சொனிஎரிக்சன், வோடபோன், சைனா சாம்சாங் போன்றவற்றுடன் நாளுக்கு நாள் சந்தையில் மேலும் புதிய புதிய வகைகள் அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றன.
ஏற்கனவே யாழ்குடாநாட்டில் பாவனையில் இருக்கும் டயலொக்,  மொபிட்டல், ஹச், என்பவற்றுடன் மிக அண்மையில் எடிசலாட் போன்ற புதிய வலையமைப்பும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி தனியார் தொலைபேசி இணைப்புக்களை வழங்கும் நிறுவனங்கள் தமது போட்டி காரணமாக வாடிக்கையாளரை தம்மிடையே இணைத்துக் கொள்ள கொடுப்பனவுகளை வசதி,பக்கேஜ் வசதியில் 1000நிமிடங்கள் இலவசமாகவும் life time discount என்பன காணப்படுகின்றன.
கையடக்கத் தொலைபேசியின் பிரதான முக்கிய செயற்பாடாகவும் அனைவராலும் விரும்பக்கூடியதாகவும் அமைவது எல்லா நேரமும் எந்த இடத்திற்கும்கொண்டு சென்று பயன்படுத்துவதுடன்,விரைவாக தகவல்களை வழங்கவும்,பெற்றுக்கொள்ளவும் முடிகிறது. தறபோது யாழ்ப்பாணத்தில் china தயாரிப்பில் E-tel,Alfa-tel,Figna-tel,Origin போன்ற கைத்தொலைபேசிகள் குறைந்தவிலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
மனிதர்களின் ஆறாவது விரலாகவே கையடக்க தொலைபேசி மாறிப்போய்விட்டது. ஆசைக்கு ஒன்று ஆஸ்திக்கு ஒன்று என்பது போல் அலுவலகப் பணிக்கு ஒன்று,குடும்ப தொடர்புக்கு ஒன்று எனவும் இரண்டு சிம்களை ஒரே கைத்தொலைபேசியில் பாவிக்கும்போது பெருமளவு நன்மையைத் தருகின்றது.ஆயினும் இதன் மூலம் பொது இடங்களில் பெண்களை படம் எடுப்பதும், வீடியோ பிடிப்பதும் மற்றும் Internet மூலம் ஆபாசபடங்களை  download செய்து அதனை ஏனையவர்களுக்கும் Blue tooth மூலமும் பரிமாறிக் கொள்வதால் இளைய சந்ததி மற்றும் மாணவர்கள் தவறான பாதைக்கு இட்டு செல்கிறது. நவீன வசதிகளுடன் கூடிய செல்போன்களில் இணையத்தள வசதியுடாக ஆபாசப்படங்களை பார்வையிடுவது தற்போது தடைசெய்யப்பட்டுள்ளது.
சீனநாட்டுத் தயாரிப்பு செல்போனில் “வாய்ஸ் சேஞ்சர்” என்ற வசதி பலரின் தூக்கத்தை கெடுப்பதாக மாறியிருக்கின்றது. “வாய்ஸ் சேஞ்சர்” மூலம் முதியவர், நடுத்தர வயது ஆண், இளைஞர், குழந்தை, இளம்பெண், நடுத்தர வயதுப்பெண், மூதாட்டி, என்ற ஏழுவகை குரல் பிரிவுகள் உண்டு. இதில் ஏதாவது ஒன்றைத் தெரிந்து நாம் பேசும் அல்லது பேசவிரும்பும் நபரைத் தொடர்பு கொண்டு பேசினால் எதிர்முனையில் இருப்பவருக்கு நம்முடைய குரல் நம் குரலாக ஒலிக்காது. நாம் தேர்ந்தெடுத்த எந்தகுரலோ ஒலிக்கும்.இதன்மூலம் பெருமளவு கொள்ளைச் சம்பவங்கள்,மற்றும் ஏமாற்று வேலைகள் செய்வதற்கும், ஒருவர் நண்பராக பாவணை செய்து நடித்து இன்னொருவரை ஏமாற்றி தேவைகளை நிறைவு செய்து கொள்வதாகவும் அமைய வழிகோலாக அமைகிறது.
சில தவறிவரும் அழைப்புக்களை இணைத்துக் கொள்வதன் மூலம்தெரியாத நபர்களின் தொடர்புகள் ஏற்படுத்தப்படுகின்றன. இவ்வாறு ஏற்படும் தெரியாத நபர்களின் தொடர்புகள்  நீண்டநேரப்பேச்சு, அழைக்கும் இடங்களுக்கு செல்லல் போன்ற செயற்பாடுகள் இடம் பெறுகின்றன. இதனால் நேரவிரையம், பணவிரையம், வீட்டில் பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையில் சண்டை,சச்சரவு, உறவுகளுடன் பிரவுகள் ஏற்படுகின்றது. “ வீதிகளில் நீண்ட நாள் சந்திக்காத நணபர் அல்லது உறவினர் ஒருவரை சந்தித்து கதைத்துக் கொண்டிருக்கும் போது கையடக்கதொலைபேசி ஒரு அழைப்பு வருகின்றது. வந்த கையடக்கதொலைபேசி அழைப்பில் உள்ளவருடன் கதைத்துக் கொண்டிருப்பார்கள் அருகில் உள்ளவரைக் கூட மறந்து கதைப்பது” கைத்தொலை பேசி காரணமாக அமைகின்றது.
தற்போது முதியவர்கள்கூட கையடக்கதொலைபேசியை தமக்கும் ஏற்ற வகையில் பயன்படுத்துகின்றன.பஸ்லில் பயணம் செய்யும்போது வயோதிபர் ஒருவர் தனது போனை தனது பையில் இருந்து எடுத்து தனது உறவினரின் நம்பரை ஒவ்வொன்றாக மெதுவாக டயல் செய்து தான் குறிப்பிட்ட இடத்திற்கு கிட்ட வந்துவிட்டதாகவும் தன்னை வந்து அழைத்து செல்லவும் என்று கூறி விட்டு போனை வைக்கிறேன். பின் அந்த வயோதிபர் போனை மெதுவாக தனது பையினுள் வைத்தார். தற்போது வாகனங்கள் செலுத்தும் போதும் கையடக்க தொலைபேசியை அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.
இதனால் அதிகஅளவு விபத்துக்கள் ஏற்படுகின்றது. குறிப்பாக மோட்டார் வாகனம் செலுத்துபவர்கள் தமதுதலைக்கவசத்திற்கு உள்ளே கையடக்க தொலைபேசியை வாகனத்தை செலுத்தியபடி கதைத்துக் கொண்டு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ் குடாநாட்டில் குறிப்பிட்டசில காலப்பகுதிக்கு முன் எங்காவது ஒரு சிலரே மொபைல்போன் பாவனையாளராக இருந்தனர்.ஆனால் தற்போது வீட்டிற்கு நான்கு ஐந்து செல்போன் என்பது தற்போதைய நிலமை. தற்போது படிக்கும் மாணவர் முதல் வயதான தாத்தாக்கள் வரை அனைவரது கைகளில் இருப்பதும் செல்போன் தான். ஒருவர் பல செல்போன்களை வைத்திருப்பதால் மக்கள் எண்ணிக்கையை விட செல்போன் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.
மாணவர்களிடையே பரவலாக இருக்கும் கருத்து என்னவெனில் செல்போன் பாவனையில் வர முன் note book தரமாட்டேன். வேறு எதுவானலும் தருவேன் ஆனால் தற்போதைய நிலை எதுவானலும் தருவேன் phone மட்டும் தரமாட்டேன் என்ற நிலையாக மாறிவிட்டது. எதை,எங்கு,எப்படி பாவிப்பது என்ற நிலையில் இருந்து விலகிய செயற்பாடாகவே குடாநாட்டு இளைஞர்களின் கையடக்க தொலை பேசி பாவனை அமைந்திருக்கிறது.
“அடையாள அட்டையை மறந்தாலும் எனது கையடக்கத் தொலைபேசியைப் பொக்கற்றில் வைப்பதற்கு மறந்ததில்லை”என்று இளைஞர் ஒருவர் கூறுகின்றார். தொழில்நுட்ப வளர்ச்சி  வரவேற்கதக்கது. ஆனால் அது ஏற்படுத்தும் பாதிப்புக்கள் அச்சுறுத்துபவையாக இருக்கின்றது.
ஆங்கிலேயர் காலத்தின் பின் யாழ்ப்பாண நிலை “கந்தபுராண கலாச்சாரமாகக்”காணப்பட்டது.ஆனால் தற்போது அதுமாறி கந்தபுராண கலாச்சாரம் கான்போன்(hand phone)கலச்சாரமாக மாறிவிட்டது.

0 comments:

Post a Comment