Saturday, November 27, 2010

மொபைல் தானாக வாழ்த்தனுப்ப........

மொபைல் போன் பயன்பாட்டில் அதிகம் பயன் படுத்தப்படுவது எஸ்.எம்.எஸ். என்னும் குறுஞ்செய்தி அனுப்பிப் பெறுவதுதான். சில நிறுவனங்கல் தங்கள் மொபைல் திட்டங் களில் எஸ்.எம்.எஸ். செய்தி அனுப்ப கட் டணம் வசூலிப்பதில்லை; அல்லது நாளொன்றுக்கு 100 எஸ்.எம்.எஸ். வரை இலவசம் என்று சலுகை தருகின்றனர். இதைப் பயன்படுத்திக் கொண்டு பேசுவதற்குப் பதிலாக இன்டர்நெட் இன்ஸ்டண்ட் மெசஞ்சர் போல பலர் எஸ்.எம்.எஸ். மூலம் தங்கள் உரையாடலை மேற்கொள்கின்றனர்.
ஆனாலும் மிகவும் பொறுப்பான வழி யிலும் எஸ்.எம்.எஸ். செய்திகள் பரிமாறப் படுகின்றன. இவற்றில் மிக முக்கியமானது குறிப்பிட்ட நாட்களில் ஒருவருக்கு வாழ்த்து செய்தி அனுப்புவதுதான். பிறந்த நாள், திருமணநாள் மற்றும் பண்டிகை நாட்களில் வாழ்த்துச் செய்திகள் அனுப்புவது மொபைல் பயன்பாட்டில் இப்போது நடை முறை வழக்கமாகவே மாறிவிட்டது. அதனால் ஒருவரிடமிருந்து ஏன் செய்தி வரவில்லை என அவரின் நண்பர் அல்லது உறவினர் கோபித்துக் கொள்வதும் சகஜமாகிவிட்டது. ஏனென்றால் பண்டிகை நாட்களில் வாழ்த்து சொல்வது நமக்கு எளிதானது. ஆனால் பிறந்த நாட்கள் மற்றும் மணநாட்களை நினைவில் வைத்து வாழ்த்து அனுப்புவது நம்மில் பலருக்கு தடுமாறும் செயலாக அமைந்துவிடுகிறது. மிகவும் உற்றவர்களின் இந்த நாட்கள் கூட மறந்துவிடுகிறது.

மொபைல் போன்களில் ரிமைண்டர் என ஒரு வசதி உள்ளது.இது அந்த அந்த நாட்களில் நமக்கு நினைவு படுத்தும். இருந்தாலும் அந்த ரிமைண்டரைப் பெற்று நம் வேலைகளிடையே வாழ்த்துச் செய்தி அனுப்புவதையும் நாம் மறந்திடக்கூடும். இதற்குப் பதிலாக செட் செய்தால் மொபைல் போன் தானாகவே வாழ்த்துச் செய்தி அனுப்பினால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஒரு முறை ஒவ்வொருவரின் நாட்கள், அதற்கான செய்திகள் என அனைத்தையும் செட் செய்துவிட்டு இருந்துவிடலாமே!

இந்த வசதியைத் தரும் வகையில் மொபைல் போனுக்கான சாப்ட்வேர் ஒன்று நமக்குக் கிடைக்கிறது. இந்த சாப்ட்வேர் புரோகிராமின் பெயர் எஸ்.எம்.எஸ்.டைமர் (SMS Timer). இதன் மூலம் குறிப்பிட்ட காலத்தில், நேரத்தில் ஒருவருக்கோ அல்லது பலருக்கு மொத்தமாகவோ ஒரு செய்தியை அனுப்பும்படி செட் செய்திட முடியும். இப்படியே பல செய்திகளை வெவ்வேறு நாட்களில் அனுப்ப முன்கூட்டியே திட்டமிட்டு அமைத்திடலாம். இதன் சிறப்பு என்ன வென்றால் இதற்கு இன்டர்பேஸ் எதுவும் தேவையில்லை. மேலும் பயன்படுத்துவதும் எளிது.

இந்த புரோகிராமைப் பதிந்துவிட்டால் எஸ்.எம்.எஸ். அனுப்ப முயற்சிக்கையில் டெக்ஸ்ட்டுக்கான பாக்ஸ் தரப்படும். செய்தியை டைப் செய்தவுடன் இந்த செய்தியை இப்போது அனுப்பவா? அல்லது அனுப்ப வேண்டிய நேரம் மற்றும் நாளைத் திட்டமிடவா? என்று கேட்கும். உங்கள் விருப்பப்படி ஆப்ஷன் தேர்ந் தெடுக்கலாம். திட்டமிட (Schedule) விரும்பினால் உடனே அதற்கான தேதி நேரம் மற்றும் பெறுபவரின் மொபைல் எண் கேட்டு வாங்கி போனில் பதிவு செய்யப்படும்.

ஒரு எஸ்.எம்.எஸ். செய்தியில் 1600 கேரக்டர்கள் வரை இருக்கலாம். ஒரே நேரத்தில் 1000 எஸ்.எம்.எஸ். வரை அனுப்பலாம். செய்தி அனுப்பப்பட்டு விட்டதற்கான டெலிவரி ரிப்போர்ட்டும் உடனே உங்களுக்குக் கிடைக்கும். ஓராண்டுக்கு முன் வரை இதில் செய்திகளை அனுப்ப செட் செய்திடலாம்.

இதனால் வெவ்வேறு நேரத்தில் இயங் கும் வெளிநாடுகளில் உள்ள நண்பர்களுக்கு இதன் மூலம் சரியான நேரத்திற்கு மெசேஜ் அனுப்புவது எளிதாகிறது. செட் செய்த மெசேஜ் மற்றும் நாட்களை மீண்டும் மாற்றி அமைக்கலாம். அதே போல இந்த அப்ளிகேஷனை நாம் விரும்பாத போது இயங்காமல் நிறுத்தி வைக்கலாம்.

இந்த அப்ளிகேஷன் புரோகிராமினை www.getjar.com என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து இறக்கிக் கொள்ளலாம். இதன் லேட்டஸ்ட் பதிப்பு எஸ்.எம். எஸ்.டைமர் 2.0. இது சிரீஸ் 60 உள்ள மொபைல் போன்களில் செயல்படும். இதனை இலவசமாக டவுண்லோட் செய்து கொள்ளலாம். இலவசமாக முதல் 5 எஸ்.எம்.எஸ். வரை அனுப்பலாம். அதன் பின் இதற்குக் கட்டணம் செலுத்த வேண்டும்.

இதன் மூலம் எஸ்.எம்.எஸ். அனுப்ப வேறு தனி கட்டணம் இல்லை. இவற்றிற்கு உங்கள் சர்வீஸ் புரவைடர் எவ்வளவு கட்டணம் வசூலிக்கிறார்களோ அவ்வளவு மட்டும் தான்.பதிவு பனுள்ளதாக இருந்தால் மறக்காம ஓட்டு போடுவதை மறக்காதிங்கள்..

0 comments:

Post a Comment