அவரவர் வீட்டில் இணைய இணைப்பு இருக்கிறதோ? இல்லையோ? ஆனால் அவர்களிடத்தில் பேஸ்புக் கணக்கு மட்டும் நிச்சயமாக இருக்கும். ஒரு ஐந்து வயது சிறுவனிடத்திலும் பேஸ்புக் கணக்கு இருக்கிறது. மூன்று வருடங்களுக்கு முன்பு சென்று பார்த்தால் கூகுளின் ஆர்குட் தான் மிக மிக பிரபலமாக இருந்தது ஆனால் இப்பொழுது அது தலைகீழாக மாறிவிட்டது.
அமெரிக்காவில் பேஸ்புக் கூகுளை முந்திவிட்டது! என்றெல்லாம் தகவல் வந்தது அந்த அளவிற்கு பேஸ்புக் காய்ச்சல் பரவியுள்ளது.சரி இப்பொழுது விசயத்திற்கு வருவோம்.
பொதுவாக நம் பேஸ்புக் கணக்கின் முகவரி இப்படி இருக்கும்
http://facebook.com/123455669854537.
இதுவே அந்த முகவரி இப்படி இருந்தால்
http://www.facebook.com/cpimran மற்றவர்களிடம் பகிர்ந்துக்கொள்ள எவ்வளவு வசதியாக இருக்கும்!
இதை எப்படி செய்வது என்ற குழப்பம் உங்கள் மனதில் எழும். அந்த குழப்பத்தை போக்கவே இந்த பதிவு.
1.முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கை திறக்க வேண்டும். பிறகு ACCOUNT ---> ACCOUNT SETTINGS செல்ல வேண்டும்.

2.அங்கு சென்று USERNAME என்ற இடத்தில் CHANGE என்பதை சொடுக்கவும்.
3. பிறகு உங்கள் தொலைப் பேசி எண் கேட்கும் அதனை ஒப்படைத்து அது கூறும் வழிமுறையின்படி செய்யவும்,அவ்வளவுதான்! பதிவு பனுள்ளதாக இருந்தால் மறக்காம ஓட்டு போடுவதை மறக்காதிங்க...

0 comments:
Post a Comment